கொஞ்சம் பெரிய பெரிய ஹோட்டலில், வெள்ளை நிறத்தில் வெஜிடபிள் புலாவ் என்ற ஒரு டிஷ் கிடைக்கும். காய்கறிகள் போட்டு பாசுமதி அரிசியில், பார்ப்பதற்கு கண்ணை பறிக்கும் அளவிற்கு மசாலா பொருட்கள் குறைவாக சேர்க்கப்பட்டு, செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் இது. நிறைய பேருக்கு இது ஹோட்டலில் சாப்பிட மிகவும் பிடிக்கும். வீட்டில் முயற்சி செய்தால் அதே சுவையில் வராது. ஹோட்டலில் குறிப்பாக, ஸ்டார் ஹோட்டலில் கொடுக்கப்படும் அதே சுவையில், தான் இன்று இந்த வெஜிடபிள் புலாவை நாமும் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேரட் – 50 கிராம், பீன்ஸ் – 50 கிராம், பச்சைப் பட்டாணி – 50 கிராம், உருளைக்கிழங்கு – 50 கிராம், ஒரு அளவிற்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பெரிய வெங்காயம் – 1 நீள்வாக்கில் வெட்டியது, தக்காளி பழம் – 1 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 4 லிருந்து 5 குறுக்கே கீனியது. சீரகம் – 1 ஸ்பூன், பட்டை – 1 துண்டு, கிராம்பு – 3, ஏலக்காய் – 3, கல்பாசி – ஒரு சிறிய துண்டு. தாளிப்பதற்கு எண்ணெய் – 3 ஸ்பூன், நெய் – 1 ஸ்பூன். தேவையான அளவு – உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், பாஸ்மதி அரிசி – 1 கப்.

அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக்கொள்ளுங்கள். அதில் எண்ணெய் நெய் ஊற்றி சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, கல்பாசி, இவைகளைப் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு கண்ணாடி பதத்தில் வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு தக்காளி பழம் சேர்த்து 2 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும். கூடவே, பச்சை மிளகாயையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதோடு பொடியாக நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து, 2 சிட்டிகை உப்பு போட்டு, ஒரு நிமிடம் வதக்கினால் போதும். அதன் பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன் சேர்த்து, மீண்டும் 2 நிமிடங்கள் வதக்கி, ஒரு டம்ளர் அளவு பாசுமதி அரிசிக்கு 1 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கொதிக்க வைத்த பின்பு, 20 நிமிடங்கள் ஊற வைத்த பாசுமதி அரிசியை போட்டு, புலாவை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin