நம்முடைய வீட்டில் பயன்படுத்தப்படும் தண்ணீர் உப்பு தண்ணீராக இருந்தால், அதன் மூலம் நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் நிறைய இருக்கும். அதாவது அந்த உப்புத் தண்ணீரை கொண்டு எந்த ஒரு பொருளை கழுவி, எடுத்தாலும் அது வெள்ளையாக, உப்பு பூத்தது போல ஒரு தோற்றத்தை உண்டு பண்ணிக் கொண்டே இருக்கும். இதேபோல் தான் உங்களுடைய வீட்டில் இருக்கும் டைல்ஸ் வெள்ளையாக இருந்தாலும் சரி, கருப்பாக இருந்தாலும் சரி, மாப் போடும்போது வெள்ளைத் திட்டுக்கள் படிந்து, வீடு துடைத்த திருப்தியே நமக்கு கிடைக்காமல் இருக்கும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது தரையை துடைத்த பின்பு வெளிச்சத்தில் நின்று பார்த்தீர்கள் என்றால், நீங்கள் துடைத்த அடையாளங்கள் அப்படியே நிற்கும். நம்மில் நிறைய பேர் வீட்டில் இதை பார்த்து இருப்போம். இந்த வெள்ளைத் திட்டுக்கள் இல்லாமல் நம்முடைய டைல்ஸ் தரையை பளபளவென துடைப்பது எப்படி? என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் நீங்கள் வீடு துடைக்கும் தண்ணீரில் லைசால், போன்ற எந்த வகையான கிருமிநாசினியையும் சேர்த்துக் கொள்ளலாம். இருப்பினும் அதனோடு 10ml அளவு கம்ஃபோர்ட் (comfort fabric conditioner) சேர்க்கவேண்டும். துணிகள் வாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த லிக்விடை நாம் பயன்படுத்துவோம் அல்லவா? எந்த பிராண்டை வேண்டுமென்றாலும் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். இப்போதெல்லாம் 3 ரூபாய்க்கு சிறிய சேம்பிள் பாக்கெட் கூட கிடைக்கின்றது. அதை வாங்கி 1 பாக்கெட்டை, 1/2 பக்கெட் அளவு தண்ணீரில் கலந்து கொண்டால் கூட போதுமானது. நீங்கள் வீடு துடைக்க பயன்படுத்தும் உப்பு தண்ணீரில் கம்போர்ட் மற்றும் ஏதோ ஒரு கிருமிநாசினி இவை இரண்டையும் ஒன்றாக கலந்து வீட்டை சுத்தமாக துடைத்து விடுங்கள்.

இதன் மூலம் உங்களுடைய வீடும் எப்போதும் நறுமணமாக இருக்கும். உப்பு தண்ணீரால் ஏற்படக்கூடிய கறை என்பது தரையில் பிடிக்காது. கம்போர்ட் லிக்விடை உங்களுடைய தண்ணீரில் கலந்து இருப்பதால், லேசாக கொழுப்பு தரையில் இருப்பது போல ஒரு தன்மை இருக்கும். ஆகவே, உங்களுக்கு சிரமம் என்னவென்றால் இரண்டாவது முறை சாதாரண தண்ணீரை கொண்டு உங்களது தரையை மாப் போட வேண்டியதுதான்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin