நம்முடைய வீடுகளில் செடிகள் வளர்ப்பது என்றால் எல்லோருக்கும் பிடித்த விஷயம். அதில் ஆண், பெண் வேறுபாடு என்றெல்லாம் கிடையாது. ஏனென்றால் அது தன்னையும் அழகுபடுத்திக் கொண்டு நம்முடைய வீட்டையும் அழகுபடுத்தும். அது மட்டுமில்லங்க. நம்முடைய மனதை அமைதிப்படுத்தி புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அதிலும் குறிப்பாக, ரோஜாச்செடிகள் வளர்க்கப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன? ரோஜாக்களைப் பார்த்தாலே நம்முடைய மனம் மகிழ்ச்சியடைந்து விடும். ரோஜாக்கள் தான் எப்போதுமே நம்முடைய தோட்டங்களை அழகுபடுத்தும். அதேசமயம் அது நம்முடைய தோட்டத்தில் நிறைய இடத்தையும் அடைத்துக் கொள்ளும் வாய்ப்புண்டு. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரோஜாச் செடிகளை தொட்டிகளில் வளர்ப்பதை விடவும் மண்ணில் வளர்த்தால் தான் நிறைய பூக்கும். தொட்டிகளில் வளர்க்கக்கூடாது என்றெல்லாம் சிலர் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் உண்மை அப்படியல்ல. எங்கு வளர்த்தாலும் அந்த செடிகள் வளரத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தால் போதும். தொட்டிகளில் தாராளமாக ரோஜாச் செடிகளை வைத்து நிறைய கொத்து கொத்தாக பூக்கள் பூக்க வைக்க முடியும்.
பொதுவாக செடிகள் வளர்க்க நல்ல மண் வளம் இருக்க வேண்டும். இல்லையென்றால் செடி வேகமாக பட்டுப்போய்விடும். செழித்து வளராது. பூக்காது. காய்க்காது எ்னறு சொல்வார்கள். அதனால் தொட்டிகளில் கூட மண்ணை நிரப்பித் தான் வளர்ப்பார்கள். ஒரு விஷயத்தை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தொட்டிகளில் அடைக்கப்பட்ட மண்ணில் எவ்வளவு நாள் ஊட்டச்சத்து அப்படியே இருக்கும்? ஆம். அதனால் தொட்டிகளில் மண்ணே இல்லாமல் மிக எளிதாக சூப்பராக கொத்துக் கொத்தாக பூக்கும்படி செடிகளை வளர்க்க முடியும். எப்படி என்று பார்க்கலாம்.
மண்ணுக்கு பதிலாக இந்த கொக்கோ பெட் பிரிக்கைத் தான் பயன்படுத்தப் போகிறோம். பேரை பார்த்து பயப்படாதீங்க. இது ஒன்னுமில்ல. நன்கு சுத்தப்படுத்தி மட்க வைக்கப்பட்ட தேங்காய் நார் கலவை தான். இது செங்கல் போன்று பேக் செய்யப்பட்டு விற்கப்படும். இதை வெளியில் எங்கும் தேடி அலையத் தேவையில்லை. செடிகள் விற்கும் நர்சரி கடைகளிலேயே கிடைக்கும். இது நிறைய அளவுகளில் கிடைக்கும். ஒரு செங்கல் அளவு உள்ள பாக்கெட்டை வாங்கிளால் 3 செடிகள் வரை உங்களால் நட முடியும். இது வெறும் 30 ரூபாய் முதல் 45 ரூபாய் தான் செலவாகும்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .