நம்முடைய தமிழ்நாட்டு பலகாரங்களின் நாவிற்கு சுவையை தரக்கூடிய எத்தனையோ வெரைட்டி ரெசிபிக்கள் உள்ளது. சிலது இனிப்பு வகையாக இருக்கும். சிலது கார வகையாக இருக்கும். இன்று நாம் பார்க்கப் போவது சுவையான பூண்டு தொக்கு. இந்த ரெசிபியை யாருமே மிஸ் பண்ணாதீங்க. ஒரே ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. இந்த பூண்டு தொக்கை செய்து வைத்து விட்டால், மூன்று மாதங்கள் ஆனாலும் இது கெட்டுப்போகாது. சுட சுட சாதம் இட்லி, தோசை, சப்பாத்தி பூரி பணியாரம் இவைகளுக்கு தொட்டுக் கொள்ள இந்த தொக்கு செம சூப்பரா இருக்கும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரொம்ப ரொம்ப ஈஸியா சுவையா இந்த பூண்டு தொக்கை எப்படி செய்வது தெரிந்து கொள்வோம் வாருங்கள். முதலில் 1 கப் அளவு பூண்டை எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். நாட்டு பூண்டாக கிடைத்தால் அதை இந்த பூண்டு தொக்கு செய்ய பயன்படுத்தினால் இதனுடைய ருசியும் வாசமும் அதிகமாக இருக்கும். நாட்டு பூண்டு இல்லை என்பவர்கள் சாதாரண பெரிய பல் பூண்டை உரித்து, பூண்டு தொக்கை அரைக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பின்பு அதில் உரித்த பூண்டு பல்லை போட்டு முதலில் சிவக்க வறுக்க வேண்டும். பூண்டு முக்கால் பாகம் சிவந்து வந்தவுடன் வர மிளகாய் – 10, கருவேப்பிலை – 1 கொத்து, சீரகம் – 1 ஸ்பூன், பெரிய நெல்லிக்காய் அளவு – புளி, மிளகு – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு மீண்டும் வதக்கத் தொடங்குங்கள். எல்லா பொருட்களும் சேர்ந்து வறுபட்டு பூண்டு கோல்டன் பிரவுன் கலர் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு இதை அப்படியே ஆறவிடுங்கள். ஆறிய இந்த எல்லா பொருட்களையும் அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு, வெல்லம் – 1/2 ஸ்பூன், போட்டு அரைக்க வேண்டும். தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது. வதக்கிய நல்லெண்ணெய்யோடு எல்லா பொருட்களையும் அப்படியே போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பார்ப்பதற்கு இது பூண்டு ஊறுகாய் போல தான் இருக்கும்.

கைப்படாமல் இந்த பூண்டு தொக்கை மிக்ஸி ஜாரில் இருந்து எடுத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி தண்ணீர் படாமல் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், இந்த தொக்கு மாதக்கணக்கில் கெட்டுப் போகாமல் இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி சுட சுட சாதத்திற்கு இதை சைடிஷ் ஆக வைத்து ட்ரை பண்ணி பாருங்க. அட்டகாசமான சுவை இருக்கும். இது முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடிய ஒரு ரெசிபி.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin