பூண்டு தோலில் இவ்வளவு விஷயம் இருக்கா ?? இது தெரிஞ்சா நீங்க பூண்டு தோலை வீனாக்கவே மாட்டீங்க!!

நம் வீட்டில் அனைத்து வகையான உணவு சமைப்பதற்கும் அதிகபட்சம் தேவைப் படுவது பூண்டு அதை அவ்வப்போது உரித்து வைப்பது பெண்களின் வழக்கம் அதுபோல் வீணாக தூக்கி எறியும் பூண்டு தோலில் உள்ள நல்லதும் மற்றும் அதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்றும் வாங்க பார்க்கலாம் மொத்தமாக சேர்த்து வைத்திருந்த பூண்டு தோலை எடுத்துக் கொண்டு நமது வீட்டில் இருக்கும் துணிபை ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் பூண்டு தோலில் அளவிற்கு ஏற்றவாறு எடுத்து கொண்டு அழகாய் முடித்து ஒரு தலையணையை மாதிரி தைத்து வைத்துக் கொள்ளலாம் இது நம் வீட்டில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு தலையில் நீர் கோர்த்து நிற்பதால் அதிகமாக ஜலதோஷம் பிடிக்கும் அவ்வாறு ஆகாமல் இருக்கும் குழந்தைகளை இதில் தலை வைத்து படுக்க வைத்தால் போதும்.

தலையில் உள்ள நீர் எல்லாம் இதில் வடிந்துவிடும் இதை பெரியவர்களாகிய நாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் அதேபோல் பூண்டு தோலை ஒரு வெள்ளைத் துணியில் கொட்டி சுருக்கி சுருக்குப் பை போன்று ஆக்கிக் கொண்டு அதை நம் வீட்டு தோசைக்கல்லை சூடாக்கி அதன் மீது சிறிது நேரம் வைத்து சூடானவுடன் தலையில் நீர் கோர்த்து இருக்கும் நபர்களுக்கு அல்லது உடல் வலி நீங்குவதற்கு இதை அந்த இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் எளிதில் குணமாகிவிடும் அடுத்து நன்மை என்னவென்றால் பூண்டு தோலை ஒரு வாணலில் வைத்து நன்றாக கருகும் வரை வதக்க வேண்டும் கரு நிறத்தில் தீய்ந்தவுடன் அதை எடுத்து மிக்சியில் வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு 4 டீஸ்பூன் அளவிற்கு அந்த பொடியை எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் 4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ளவும் நன்கு கலக்கி ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும் மறுநாள் அதை நமது தலைகளில் ஈறுகளில் முடி முழுவதும் தேய்த்து 4 மணி நேரம் வரை ஊற வைத்து மிதமான ஷாம்பு போட்டு குளித்தால் இளநரை பிரச்சனை என்பது நமக்கு வராது நம் தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளர உதவும் இந்த பொடியில் நீங்கள் நல்லெண்ணெயும் பயன்படுத்தலாம் ஆனால் அதை அரை மணி நேரத்திற்கு மேலாக ஊற விடக் கூடாது ஏனெனில் நல்ல எண்ணெய் குளிர்ச்சி ஆகும். சாதாரண பூண்டு தோலில் ஒளிந்திருக்கும் இவ்வளவு விஷயங்கள் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் பகிருங்கள் நண்பர்களே.

நம் குப்பை என ஒதுக்கி தூக்கி எறியும் பூண்டு தோல் நமக்கு எவ்வளவோ நன்மைகளை பெற்றுத் தருகிறது பார்த்தீர்களா எனவே எதையும் நாம் வீணாக தூக்கி வீச வேண்டியது இல்லை நம்மால் முடிந்தவரை பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்தி பயன் பெறலாம் இதேபோல் பல தகவல்கள் உங்களுக்காக இங்கு பகிரப்படும் அதனை படித்து பயன் பெற்றுக் கொள்ள எங்கள் இணைய பக்கத்தை தொடரவும் இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி.