கோடைகாலம் வந்து விட்டால் ஏசி அல்லது ஏர்கூலர் இன்றி அதை சமாளிப்பது மிக கடினம். அதிகரிக்கும் வெயிலைப் போலவே, ஏசி பயன்பாட்டால் உங்கள் கரெண்ட் பில்லும் கூட தாறுமாறாக உயரக் கூடும். வியர்த்து விறுவிறுக்க ரூமுக்குள் நுழையும் நாம் உடனடியாக ஏசியை ஆன் செய்து, ரூம்-ஐ சற்று குளு, குளுவென வைத்துக் கொள்ள விரும்புவோம். ஆனால், இதில் நாம் செய்யும் சில தவறுகளால் மாத இறுதியில் மின்சாரக் கட்டணம் வெகுவாக அதிகரித்து விடுகிறது. இதை எப்படி குறைப்பது என தெரியாமல் நீங்கள் திணறிக் கொண்டிருப்பவர் என்றால், உங்களுக்கான 5 டிப்ஸ் இந்தச் செய்தியில் இருக்கிறது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சரியான டெம்பரேச்சர் எது என்று தெரிந்து கொள்ளுங்கள் ஏசியை ஆன் செய்ததும் முடிந்தவரை டெம்பரேச்சரை குறைத்து வைக்கும் பழக்கம் நம்மில் பலரிடம் இருக்கிறது. அதே சமயம், மிக குறைவான டெம்பரேச்சரில் நீங்கள் ஏசியை இயக்கும் போது, உங்கள் கரெண்ட் பயன்பாடும் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொதுவாக ஏசியை நீங்கள் 24 – 26 டெம்பரேச்சரில் பயன்படுத்தி வந்தால் மின் கட்டணத்தை சற்று குறைக்க இயலும். இந்த டெம்பரேச்சரில் உங்களுக்கான கூலிங் குறைவாக இருக்கிறது என எண்ணுகிறீர்களா? ஆனால், இதுதான் சரியான அளவு என்றும், இதில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் 24 சதவீதம் மின்சாரம் மிச்சமாகும்.

இது வெகு இயல்பாக செய்யக் கூடிய ஒன்றுதான். ஏசியை ஆன் செய்யும் முன்பாக ரூம் கதவை மூட வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இது மட்டுமல்லாமல், உங்கள் ஜன்னல்களும் இறுக்கமாக மூடியிருப்பதை உறுதி செய்யுங்கள். தேவைப்பட்டால் திரைகளை பயன்படுத்தலாம். சூரிய வெளிச்சம் உள்ளே இல்லை என்றால் ரூமில் வெகு விரைவாக கூலிங் கிடைக்கும்.

ரூமில் உங்களுக்கு தேவையான அளவு கூலிங் கிடைத்த பிறகு உடனடியாக ஸிவிட்ச் ஆஃப் செய்யுங்கள். சுமார் 1 மணி நேரத்திற்கு அந்த கூலிங் நீடிக்கும். இதனால், உங்கள் மின் கட்டணம் குறையும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin