மருக்கள் முகத்தில், கழுத்தில், உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். அதனால் அழகு குலைகிறது என்பவர்கள் அதை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாமா? இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மருக்கள் பலருக்கும் சாதாரணமாக வருவது உண்டு உடலில் எங்கு வேண்டுமானாலும் மருக்கள் வரலாம் என்றாலும் முகம் மற்றும் கழுத்தில் அதிகப்படியாக தென்படும். இவை பருக்கள் போன்று இல்லை. மச்சம் போன்று சிறு அளவு தென்படும். இவை சருமத்தில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும் கூட முகத்தின் அழகை கெடுத்துவிடும். பெரும்பாலான பெண்களுக்கு முகம், கழுத்து, தோள்பட்டை பகுதியில் இருகிறது. ஆண் களை விட பெண்களுக்கு அதிகம் மரு உண்டாகிறது.சமீப காலமாக கண்களுக்கு அரு கில் இமைகளுக்கு கீழ் ஒட்டி இருப்பதையும் கவனிக்கிறோம். சிலர் இதை ஆரம்பத்தில் கண்டு கையால் பிடித்து இழுப்பார்கள் ஆனால் இது அவ்வளவு எளிதில் வரக்கூடியதல்ல. அதோடு அவை சருமத்தில் வேறுவிதமான பிரச்சனையை உண்டாக்க கூடும்.

இதற்கு அனுபவமிக்க அழகு கலை நிபுணர்கள் அல்லது சரும பராமரிப்பு நிபுணர்களை அணுகினால் அவர்கள் அழகாய் அதை நீக்கிவிடுவார்கள். முதலில் மருக்களின் மீது அந்த இடத்தில் மருத்து போக செய்யும் க்ரீம் ஆன்டி பயாடிக் தடவி அதன் மேல் சிறிய ஸ்டிக்கர் ஒன்று பொருத்துவார்கள். அரை மணி நேரம் கழித்து அந்த ஸ்டிக்கரை நீக்கிய பிறகு அந்த மருவை எரிப்பார்கள். இதனால் வலி இருக்காது. எறும்பு ஊர்வது போன்ற இலேசான வலி மட்டுமே இருக்கும்.

பலரும் மருவை கண்டு அதை நீக்குவதற்கு பெரிய சிகிச்சை தேவைப்படும் என்று சிகிச்சை எடுத்துகொள்ள தயங்குகிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் சிறிய அளவில் மரு வரும் போதே அதை நீக்கிவிடுவது நல்லது. இல்லையென்றால் அவை வளர்ந்து பக்கத்திலும் பரவிவிடும். இது சருமத்தில் வைரஸ் தொற்று பரவுவதால் உருவாகிறது.

மருவை அகற்றிய பிறகு அந்த இடத்தில் மட்டும் சருமத்தின் நிறம் சிவப்பாகவோ தடிப் பாகவோ இருக்கும். பிறகு சருமத்துகேற்ற க்ரீம் அல்லது ஃபேஸ் பேக் பயன்படுத்தி வந் தால் அவை நாளடைவில் மறைந்துவிடும். மருவை நீக்க அழகு கலை நிபுணர்கள் சிகிச்சை அளித்தாலும் கூட கழுத்து முகம், தோள், முதுகு பகுதியில் நல்ல அனுபவமிக்க அழகு கலை நிபுணர்களே பயிற்சி அளிப்பார்கள். ஆனால் கண்களில் மார்பில் ஒட்டி வரும்போது சரும பராமரிப்பு நிபுணர்களிடம் செல்வதே சரியானது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin