கோதுமை மற்றும் அரிசி தான் உலகின் பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இந்த அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக உண்ணக்கூடியதும், அதே நேரத்தில் உடலுக்கு சிறந்த போஷாக்கும் அளிக்க கூடியது “சிறுதானியங்கள்” ஆகும். இந்த சிறுதானிய வகையை சேர்ந்தது தான் “கேழ்வரகு”. கேழ்வரகு உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.தினமும் கேழ்வரகில் செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது.

உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். மாமிசம், வறுக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால், அதை உண்ணும் போது செரிமான உறுப்புக்கள் அந்த உணவுகளை ஜீரணிக்க அதிகம் சிரமப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள கேழ்வரகு உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.

எப்படி செய்யலாம்: ஒரு கப் அளவிற்கு இடியாப்ப மாவு எடுத்து கொள்ள வேண்டும் அதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு ஜீரகத்தை கையால் துருவி அதில் கலந்து கொள்ளவேண்டும். பிறகு தேவையான அளவு நீரை அதில் கலந்து எடுத்துக்கொள்ளவேண்டும். சரியான பதத்திற்கு அதில் தண்ணீர் கலந்துகொள்ளவேண்டும். மேலும் இன்னொரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை ஒரு கப் எடுத்து கொள்ளவேண்டும். அதில் முன்பு செய்த மாதிரி ஜீரகத்தை நசுக்கி போடவேண்டும். அதே அளவு நீரை சரியான பக்குவத்தில் சேர்த்து கலந்து எடுத்து கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்த்து கொண்டு அதை அப்பளமாக யச்செய்து காயவைத்து உபயோகிக்க வேண்டும். இதில் இரண்டிலும் சரியான அளவு உப்பு கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin