எலி விலையாக இருந்தாலும் தனி வலை வேண்டும் என்பது பழமொழி. இந்த பழமொழிக்கு ஏற்ப, மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே தனக்கென சொந்த வீடு வேண்டும் என்று ஆசை இருக்கத்தான் செய்கின்றது. சூழ்நிலை காரணமாக நிதி நிலைமை காரணமாக, வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். பரவாயில்லை, சீக்கிரமே சொந்த வீடு வாங்கும் கனவு நனவாக ஆன்மீக ரீதியான ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீங்கள் வாடகை கொடுப்பதற்கு முன்பு வாடகைக்கு எடுத்து வைக்கும் பணத்தை, இந்த டப்பாவில் வைத்து எடுத்துக் கொடுங்கள் போதும். சீக்கிரமே சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைத்துவிடும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதை எந்த டப்பா என்று தெரிந்துகொள்ள உங்களுக்கும் ஆர்வமாக உள்ளதா. இப்போதே தெரிந்துகொள்ளலாம். அது உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் துவரம்பருப்பு டப்பாதான். உங்கள் வீட்டு வாடகை எவ்வளவு தொகையாக இருந்தாலும் சரி, அந்த வாடகை தொகையை எடுத்து ரப்பர் பேண்ட் போட்டு, ஒரு கவர் உள்ளே வைத்து மடித்து சுருட்டி அப்படியே திங்கட்கிழமை காலை, அந்த காசினை துவரம்பருப்பு டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள்.

மறுநாள் செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு முன்பாக துவரம்பருப்பு டப்பாவில் இருக்கும் வாடகையை எடுத்துக் கொண்டு போய் வீட்டு முதலாளிக்கு கொடுக்க வேண்டும். மாதம் மாதம் இதை செய்யுங்கள். இப்படி செய்தால் வீட்டு முதலாளிக்கு எந்த கஷ்டமும் வராது. வீட்டில் வாடகை இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகி, சொந்த வீடு வாங்கும் அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கைத்தரம் நிச்சயமாக மாறும்.

இப்படி செவ்வாய்க்கிழமை வாடகை கொண்டு போய்க் கொடுக்கும் போது முருகப் பெருமானிடம் மனமுருகி வேண்டிக் கொள்ளுங்கள். எங்களுக்கு இப்படி மாதம் மாதம் வாடகை கொடுக்கும் நிலை மாறவேண்டும். எங்களுக்கும் சொந்தமாக வீடு வாங்க கூடிய யோகம் கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, அதன் பின்பு கொண்டுபோய் வாடகை கொடுக்க வேண்டும். சிலபேருக்கு வீட்டு வாடகையை கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். இப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்தாலும், அடுத்து வரக்கூடிய மாதங்களில் வாடகை தொகையை சிரமமில்லாமல் கொடுக்கும் அளவிற்கு அவர்களுடைய நிதிநிலைமை உயரம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. சரி இந்த துவரம் பருப்புக்கும், வீட்டு வாடகைக்கும் என்ன சம்பந்தம்.

By admin