மீன ராசி அன்பர்களே, இது வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருந்து வந்த குரு பகவான் இடப்பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு 12ம் இடமான கும்ப ராசிக்கு செல்கிறார். பொதுவாக குரு 12ல் இருப்பது பணம் பல வகையில் விரயமாகும்.12ல் வரும் குரு வருமானம் இன்றி செலவுகளை அதிகப்படுத்துவார். பல விதமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும். வீண் அலைச்சல்கள் ஏற்படக்கூடும். எதிர்பாராத பல நன்மைகள் நடக்கலாம். உடல் நலம் நன்றாக இருக்கும். மருத்துவ செலவுக்கு வாய்ப்பில்லை. பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குரு பகவான் 12ல் மறைவதால், வேலைச் சுமையும், அலைச்சலும், செலவுகளும் இருக்கும். சிலர் வீட்டைப் சீரமைப்பர். வங்கி கடன் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்த முடியும். வெளிப்படையான பேச்சைத் தவிர்க்கவும். பழைய கடனை சமாளிப்பதில் சிரமம் இருக்கும். வாகனம், காப்பிட்டு தொடர்பான ஆவணங்களை புதுப்பிக்க தவற வேண்டாம். முக்கிய ஆவணங்களை தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும். எவருக்காகவும் வாக்குறுதி தர வேண்டாம்.

வரவை விட சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும். குடும்ப நலன் ஒற்றுமை கூடும். முக்கியமான பணிகளின் போது அடுத்தவர்களை நம்பி இருக்காமல் தேவையான ஏற்பாடுகளை நீங்களே செய்து கொள்வது நல்லது. குடும்பத்தினருடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். ஆன்மீக சார்ந்த விஷயங்களுக்கு அதிகம் செலவு செய்ய நேரிடும். நீண்டதொரு ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். சொத்து பிரச்சனையில் இழுபறி நிலை நீடிக்கலாம்.

வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். ஓயாத அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு செல்ல முடியும். புதிய வண்டி, வாகனம் வாங்க வேண்டிவரும். எதிர்பார்த்த காரியம் தடையின்றி முடியும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களை தவிர்க்கவும். பழைய கடன்களால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உடல் நலம் சீராகும். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். திடீர் பண வரவுக்கு வாய்ப்புண்டு. அடிக்கடி பயணம் மேற்கொள்ளுவதால் விரையம் ஏற்படும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin