முட்டை மற்றும் பிரட் பயன்படுத்தி நிறைய வித விதமான ரெசிபிகள் செய்ய முடியும். ஆனால் சற்று வித்தியாசமான இந்த பிரட் பீசா மிகவும் சுவையாக இருக்கும். இதை செய்வதற்கு அதிக அளவில் நேரம் செலவிட வேண்டிய அவசியம் இருக்காது. காலை அல்லது மாலை நேரத்தில் மிகவும் எளிமையாகவும், ஈசியாகம் செய்யக்கூடிய இந்த பீட்சாவை ஒருமுறை செய்து குழந்தைகளுக்கு சுவைக்கக் கொடுத்து பாருங்கள். மிகவும் விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை பிரட் பயன்படுத்தி பிரெட் ஆம்லெட், பிரட் டோஸ்ட், பிரட் ஃப்ரை, பிரட் அல்வா, பிரட் சாண்ட்விச், பிரட் மசாலா, பிரட் சிக்கன் மசாலா இது போன்ற உணவுகளை சுவைத்திருப்பீர்கள். ஆனால் முதன்முறையாக பிரட் வைத்து செய்யக்கூடிய இந்த பீட்சாவை ஒருமுறை சமைத்து பாருங்கள். கடையில் வாங்கும் பீட்சாவை விட மிகவும் சுவையாக இருக்கும். முதலில் 6 பிரட்டை எடுத்துக் கொண்டு அதனை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு சீஸ் பார்களை தேங்காய் சீவில் பயன்படுத்தி நன்றாக துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் கலந்து வைத்துள்ள முட்டையுடன் நறுக்கி வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். சிறிது நேரம் பிரட்டை முட்டையில் நன்றாக ஊறிவிடும். அதன்பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து முட்டையுடன் கலந்து வைத்துள்ள பிரட்டை ஆம்லெட் போன்று தோசைக்கல்லில் ஊற்ற வேண்டும். பிரெட் துண்டுகள் மேலே எழும்பி உப்பலாக இருந்தால் அவற்றை சற்று தட்டையாக இருக்குமாறு ஒரு ஸ்பூன் வைத்து சரி செய்ய வேண்டும்.

அடுப்பை சிறிய தீயில் வைத்து 5 நிமிடங்கள் வேகவைத்து, அதன் பின்னர் திருப்பி போட வேண்டும். திருப்பி போட்ட உடன் அதன் மேற்புறத்தில் மூன்று ஸ்பூன் தக்காளி சாஸை நன்றாக பரவலாகத் தடவி விட வேண்டும். அதன் பிறகு துருவிய சீஸை இதன் மீது அனைத்து இடங்களிலும் விழுமாறு தூவி விட வேண்டும். 5 நிமிடம் தோசைக்கல்லில் இதனை அப்படியே வைத்து விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin