சாப்பிடும் உணவு சுவை மிகுந்ததாக இருந்தால் மட்டும் போதாது. அது உடலுக்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் அளிப்பதாக இருக்க வேண்டும். உணவு சமைக்கும் போது சுவையை அதிகரிக்கவும், உடல் நலம் மேம்படவும் சில பொருட்கள் அதில் சேர்க்கப்படுகின்றன. அப்படியான ஒரு உணவு பொருள் தான் பூண்டு. பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நன்கு ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட நாற்பது வயதை தொடும் காலங்களில் ரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த ரத்த அழுத்தத்திற்கு ஆண், பெண் என்ற பேதங்கள் கிடையாது. பூண்டு அல்லில்சிஸ்டின் என்படும் வேதிப்பொருளை தன்னகத்தே அதிகம் கொண்டது. இது ரத்த அழுத்தத்தை சமசீராக வைக்க உதவுகிறது. எனவே தினந்தோறும் சிறிதளவு பூண்டு சேர்த்து சமைக்கப்பட்ட உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது. உடலின் முக்கிய உறுப்பான இதயம் பாதிக்கப்பட்டால் அந்த நபர் மீண்டும் இயல்பான வாழ்க்கை வாழ அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கும். பூண்டு எத்தகைய இதயம் சம்பந்தமான பிரச்சனைகளையும் தீர்ப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வழக்கமாக பூண்டு சாப்பிடுபவர்களுக்கு இதயம் தசைகள் வலுவாகும். மேலும் இதயரத்தகுழாய்களில் கொழுப்பு படுவதையும் தடுக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உடலின் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு சிலருக்கு உடலில் சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொஞ்ச காலத்திற்கு பூண்டு சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது சிறந்தது.
பூண்டு கிருமி நாசினி வேதிப்பொருட்களை அதிகம் கொண்டதாகும். வயிற்றின் குடல்களில் பூச்சி தொந்தரவுகளால் அவதியுறுபவர்கள் பூண்டு அதிகம் சாப்பிட்டு வர வேண்டும். உடலில் வாதத்தன்மை அதிகரிப்பதால் வயிற்றில் உண்டாகும் வாயுக்கோளாறுகளையும் பூண்டு நீக்கும். உணவை செரிமானம் செய்ய உதவும் அமிலங்களின் சமச்சீர் தன்மையை காக்கும்.சில பூண்டு பற்களை நன்றாக இடித்து ஒரு ஸ்பூன் அளவு வாயில் போட்டு, சிறிது வெண்ணீர் அருந்துவதால் வாயு கோளாறுகள், அஜீரண பிரச்சனைகள் நீங்கும்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .