முட்டி வலி இருக்கும் போது மூட்டுகளின் வலியை குறைக்கதான் எல்லோரும் முயற்சி செய்கிறோம். ஆனால் துரதிஷ்டவசமாக வலியின் உபாதையை அதிகரிக்கிறதே தவிர குறைந்த பாடில்லை என்பதுதான். கீல்வாதம் என்னும் இந்த மூட்டுவலியை எதிர்கொள்ளவும் வலியை குறைக்கவும் செய்ய வேண்டிய செய்யகூடாத அனைத்து விஷயங்கள் குறித்தும் இப்போது பார்க்கலாம். நிச்சயம் இது உங்கள் வலியை குறைக்க செய்யும். வலியை அதிகரிக்காமலும் பார்த்துகொள்ளும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காய்ச்சலாக இருந்தால் மாத்திரைகள் இல்லாமல் ஒரு நாள் முழுக்க ஓய்வு எடுத்தால் போதும் என்று சொல்வார்கள் வீட்டு பெரியவர்கள். அதே போன்று மூட்டு வலி இருக்கும் போது மட்டும் ஓய்வெடுக்காமல் மூட்டுக்கு வேலை கொடு என்று சொல்வார்கள். அது உண்மை தான் மூட்டுவலி இருப்பவர்கள் ஓய்வெடுக்க கூடாது. இது உங்கள் தசைகளை பலவீனப்படுத்தும். மூட்டு வலியை மேலும் மோசமாக்க கூடும். முழங்கால்களுக்கு பாதுகாப்பான உடற்பயிற்சிகள் என்ன என்பதை அறிந்து அதை கண்டறிந்து செய்யுங்கள். எது பாதுகாப்பானது என்பதை தெரிந்து செய்வது நல்லது அல்லது உடல் சிகிச்சை நிபுணருடன் கலந்து பயிற்சி செய்யுங்கள்.

உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூட்டு வலி உபாதையை குறைக்க செய்யலாம். குறிப்பாக கார்டியோ பயிற்சிகள் முழங்கால்களுக்கு ஆதரவளிக்க கூடியவை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க கூடியவை. இது தசைகளை வலுப்படுத்த செய்கிறது. எடை பயிற்சி மற்றும் நீட்சி கூட செய்யலாம். கார்டியோவை பொறுத்தவரை, நடைபயிற்சி, நீச்சல், நீர் ஏரோபிக்ஸ், சைக்கிள் ஓட்டுதல், இயந்திர்ங்கள் போன்றவை நல்ல தேர்வுகளாக இருக்கும். இது மூட்டுகள் விறைப்பாக எளிதாக செய்யவும் சமநிலைப்படுத்தவும் கூடும்.

கால் வலி அதிகமாக இருக்கும் போது நிலையாக நீண்ட நேரம் ஓரிடத்தில் நிற்பதே சிரமமாக இருக்கும்.சேர்ந்தாற்போல் பத்து நிமிடங்கள் நிற்பது சிரமமாக இருக்கும். இந்நிலையில் உயரமான இடத்தில் ஏறி நிற்பது, உயர இருக்கும் பொருளை எட்டுவது, அதிகமான எண்ணிக்கை கொண்ட படிக்கட்டுகளை முழு வீச்சில் ஏறுவது, சாதாரணமாக சிறிய ஸ்டூலில் ஏறி நிற்பது கூட மூட்டுகளின் வலிமை தாங்காமல் கீழே விழுவதற்கான வய்ப்புகள் உண்டு. அதனால் கால்வலி , கீல்வாதம் தீவிரமாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும் போது உயரமாக ஏறக்கூடாது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin