நிறைய பேர் வீட்டில் உளுந்து வடை செய்யாமல் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா. கிரைண்டரில் உளுந்து மாவு அரைக்க வேண்டும் என்ற கஷ்டம்தான். கொஞ்சமாக மாவு போட்டு, கொஞ்சமாக வடை செய்வதற்கு எவ்வளவு பெரிய கிரைண்டரில் மாவு ஆட்டி கிரைண்டரை சுத்தம் செய்வது என்ற சோம்பேறித்தனம். இனி இந்த கவலை வேண்டாம். 100 கிராம் அளவு உளுந்தை ஊறவைத்து மிக்ஸி ஜாரில் மாவு அரைத்து, எண்ணெய் குடிக்காத மொறு மொறு சூப்பர் வடையை செய்ய முடியும். அது எப்படி. தெரிந்துகொள்வோம் வாருங்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் 100 கிராம் அளவு உளுந்தை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 முறை கழுவி, அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மணிநேரம் ஊறிய பின்பு உளுந்தில் இருக்கும் எல்லா தண்ணீரையும் வடித்துவிட்டு, உளுந்தை மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.

ஜாரில் போட்ட உளுத்தம்பருப்பை மிக்ஸியில் அப்படியே ஒரே அடியாக ஓட விடக்கூடாது. மிக்ஸியை பல்ஸ் பட்டனில் விட்டுவிட்டு தான் அரைக்க வேண்டும். முதலில் தண்ணீர் எதுவும் ஒரு சொட்டு கூட ஊற்றாமல் பல்ஸ் பட்டனை 4 முறை விட்டுவிட்டு ஓட்டி விடுங்கள். உளுந்து ஒன்றும் இரண்டுமாக அரைந்துவிடும். ஒன்றும் இரண்டுமாக அறைந்த உளுந்தம் பருப்பில், ஒரு குழி கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் மிக்ஸியை விட்டுவிட்டு அரைக்க வேண்டும்.

பல்ஸ் பட்டனில் தான், மாவு முழுவதும் நைஸாக அரையும் வரை, மிக்ஸியை ஓட்ட வேண்டும். தவிர ஒரேயடியாக பருப்பை ஓடவிட்டால் பருப்பு சூடாகி நீர்த்துவிடும். இப்படி மிக்ஸியை விட்டுவிட்டு ஓட்டி அரைக்கும்போது உளுந்து உபரியாக கிடைக்கும். அதேசமயம் நீர்த்துப் போகாது. கொஞ்சம் கொஞ்சமாக குழி கரண்டியில் தண்ணீர் விட்டு அரையுங்கள்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin