பொதுவாகவே மொறுமொறு தோசை என்றால் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லோராலும் சுலபமாக வீட்டில் மொறு மொறு தோசையை செய்ய முடியாது. ஹோட்டலுக்கு சென்றால், ஸ்பெஷல் தோசை வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம். ஹோட்டலில் சாப்பிடுவது போல, ஒரு ரோஸ்ட், உங்களுடைய வீட்டிலும், உங்களுடைய கைகளால் செய்து, உங்களுடைய பிள்ளைகளுக்குக் கொடுத்தால் எப்படி இருக்கும்? அதுவும் ரேஷன் அரிசியை வைத்து! ரேஷன் அரிசியில் ‘ஹோட்டல் ரோஸ்ட்’ எப்படி செய்வது என்று பார்த்து விடலாமா? இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் புழுங்கல் அரிசி – 3 கப், ரேஷன் பச்சரிசி – 1 கப், உளுத்தம் பருப்பு – 3/4 கப், துவரம் பருப்பு – 2 டேபில் ஸ்பூன், கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் – 1 ஸ்பூன். அதாவது 3 ஆழாக்கு ரேஷன் அரிசி எடுத்துக்கொண்டால், ஒரு அழகு பச்சரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். 1/4 கிலோ அளவு உளுத்தம்பருப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிலோ அரிசிக்கு 1/4 கிலோ உளுத்தம் பருப்பு.

முதலில் ரேஷன் அரிசியை நன்றாக சுத்தம் செய்து ஐந்திலிருந்து ஆறு முறை கழுவவேண்டும். இறுதியாக இரண்டு முறை, கல்லுப்பு சேர்த்து உராசி நன்றாக கழுவினால், ரேஷன் அரிசி வாடை தோசையில் அடிக்காது. இப்போது உளுந்து, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், அனைத்தையும் அரிசியோடு சேர்த்து, அகலமான பாத்திரத்தில் போட்டு, நல்ல தண்ணீர் ஊற்றி, நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். உப்பு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

5 மணி நேரம் ஊற வைத்தபின் அரிசி பருப்பு வகைகளை ஒன்றாக, கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதாவது சிறிய ரவை பதத்திற்கு. மொழு மொழுவென்று அழித்து விடக் கூடாது. தோசை மாவை அரைக்கும் போதும், இட்லி மாவு பதத்திற்கு தான் அரைக்க வேண்டும். தோசை ஊற்ற போகிறோம், என்பதற்காக தண்ணீர் ஊற்றி அரைத்தீர்கள். என்றால், சரியான முறையில் புளிக்காது. அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் வழித்து, தேவையான அளவு உப்பு போட்டு, கை போட்டு கரைத்து 8 மணி நேரம் வரை புளிக்க வைத்து விடுங்கள். அதன்பின்பு, புளித்து வந்த மாவை, கரண்டி போட்டு அடித்துக் கலக்க வேண்டும். புளித்த மாவு மொத்தமாக தயாராகிவிட்டது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin