முற்காலத்தில் வாழ்ந்த மக்கள் தாங்கள் உழைப்பதற்கு ஏற்றவாறு உணவை உட்கொண்டதால் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ்ந்தனர். ஆனால் இன்று எல்லாமே இயந்திர மையமாக மாறிப்போன காரணத்தினால் பலருக்கும் உடல் உழைப்பு குறைந்து விட்டது. ஆனால் உண்ணும் உணவின் அளவு குறையவில்லை. மாறாக கண்ட உணவுகளை எல்லாம் உட்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பதோடு அல்லாமல் அது பல விதமான நோய்களுக்கும் வழிவகுக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கான மிக எளிய வழி தான் “பித்த காரக்” முத்திரை பயிற்சி. உட்கார்ந்த இடத்திலேயே இதை செய்து உடல் எடையை குறைக்கலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும். இப்போது உங்கள் இருக்கைகளிலும் உள்ள மோதிர விரல்கள் மற்றும் சுண்டு விரல்களை மடக்கி அதன் மீது உங்கள் கட்டை விரல்களை வைத்துக்கொள்ளுங்கள். இருக்கைகளிலும் உள்ள ஆட்காட்டி மற்றும் நடுவிரல்கள் நேராக இருக்க வேண்டும். இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையிலே இந்த பயிற்சியை தினமும் காலையிலும், மாலையிலும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். இம்முத்திரையை தொடர்ந்து செய்து வருவதால் உங்கள் உடலிலுள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைந்து உங்கள் உடல் எடையைக் குறையும். அதோடு உடலிலுள்ள நீரின் அளவு சீராக இருக்கும். நல்ல செரிமான திறன் அளிக்கும். உடல் வெப்ப நிலை சீராக இருக்கும்.

அனால் நாம் பார்க்க போவது இதை அல்ல. இயற்கையிலே தயார் செய்து குறைக்க கூடிய ஒரு பொருள். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள்..

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin