முன்பு ஆறுமாதங்களுக்கு ஒரு முறை விளக்கெண்ணெயை பழைய சாதத்தில் ஊறிய நீரில் விட்டு வெறும் வயிற்றில் குடித்துவிடுவார்கள். வயிற்றில் இருக்கும் கழிவுகள் வெளியேறிவிடும். உணவி லும் கசப்பு சுவையை அதிகம் சேர்த்துகொள்வார்கள். தற்போது உணவு முறையில் மாற்றங்களோடு அதிகப்படியான இனிப்புகளை எடுத்துவருகிறோம். குறிப்பாக வளரும் பிள்ளைகள் அதிகப்படியான இனிப்பு வகைகளை விரும்பி உண்பார்கள். இது வயிற்றில் இருக்கும் குடல் புழுக்களுக்கு கொண்டாட்டமாகிவிடும். பொதுவாக வளரும் குழந் தைகள், பெரியவர்கள் அனைவருமே ஆறுமாதங்களுக்கு ஒரு முறை வயிற்றை சுத்தம் செய்யவும், வயிற்றில் இருக்கும் பூச்சியை ஒழிக்கவும் மருந்து எடுத்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு நீர் மருந்தும், பெரியவர்கள் மாத்திரையாகவும் எடுத்துகொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குடலில் உருண்டைபுழு, கொக்கி புழு, சாட்டை பூ, நாடா புழு என்று பல்வேறு வகையான புழுக்கள் இருக்கின்றன. இவை உணவு வழியாக உடலில் வளர்ச்சியை அதிகரிக்கும். பிள்ளைகள் வளர்வதற்கு தேவையான இரும்புசத்து, வைட்டமின் உணவை உறிஞ்சி வாழும்.

புழுவில் பெண் புழுக்கள் முட்டையிட்டு அவை மலத்தில் வெளியேறினாலும் அவை நிலத்தில் இருக் கும். பிள்ளைகள் விளையாடும் போது கைகள் மூலமாக அல்லது பாதத்தின் வழியாகவும் உடலுக் குள் ஊடுருவி வேகமாக வளரும். வளரும் பிள்ளைகள் உடலில் இவை அதிகமாகும் போது பிள்ளை களுக்கு அதிக ஆரோக்கிய தொல்லைகளை கொடுக்கும். வயிற்றில் பூச்சி இருக்கிறது என்பதை எப்படி கண்டறிவது..

குழந்தைகளுக்கு அவ்வபோது வயிறு வலி உண்டாகும். சில பிள்ளைகள் தினமும் 4 முறை கூட கழிப் பார்கள். சில பிள்ளைகள் சாப்பிட்டு முடித்ததும் பாத்ரூமை நோக்கி ஓடுவார்கள். அடிக்கடி வயிற்று போக்கு பிரச்சனையும் உண்டாகும். வாந்தி உணர்வு இருக்காது. சில பிள்ளைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். தினமும் பிள்ளைகள் வயிறு வலி என்று அழும் போதெல்லாம் அம்மாக்கள் திணறுவது உண்டு. இனிமேல் பிள்ளைகள் வயிறு வலி என்று அழுதாலோ அவ்வபோது மலம் கழித் தாலோ வயிற்றில் பூச்சிதான் என்பதை உறுதியாக சொல்லலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin