வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் எப்படி போதும்; குறைந்தது பத்து கேஸ் சிலிண்டராவது வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியா முழுக்க எழுந்துள்ளது. சிலிண்டர்களின் எண்ணிக்கையை எட்டாக உயர்த்தலாமா அல்லது ஆறு சிலிண்டர் என்கிற அறிவிப்பையே வாபஸ் வாங்கிவிடலாமா என மத்திய அரசு யோசித்து வருவது ஒருபக்கமிருக்க, சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்துவது எப்படி..? மாறிவிட்ட கலாசார சூழலில் இனி விறகு அடுப்புக்கு மாறுவது சாத்தியமே இல்லை என்கிறபோது, சமையல் எரிவாயுக்கு வேறு என்னதான் மாற்று என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சிலிண்டர் பயன்பாடு நிறைந்திருக்கிறது. அன்றாட பயன்பாட்டில் சிலிண்டர் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்னும் மன நிலையில் தான் பல பெண்கள் இருக்கிறார்கள். அடுப்புக்கு மாற்றாக வந்த சிலிண்ட ருக்கு பிறகு இண்டக்‌ஷன் ஸ்டர், எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், அவன் என பல கண்டுபிடிப்புகள் சமையல் செய்வதற்கு இருந்தாலும் இன்றுவரை சிலிண்டரை விட சிறந்தது என்ற பெயரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளுக்கு நாள் இத்தகைய கண்டுபிடிப்புகள் அதிகரித்துவந்தாலும் கூட சிலிண்டரின் பயன்பாடு அதிகரித்துதான் வருகிறது. பயன்பாட்டுக்கு ஏற்ப இதில் ஆபத்துகளும் நிறைந்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. பயன்படுத்துவதற்கு எளிதானது. அனைவராலும் எளிதாக கையாளமுடியும் என்றும் சொல்லலாம். ஆனாலும் சமயத்தில் விபத்தை ஏற்படுத்திவிடவும் செய்கிறது என்பதையும் மறுக்க முடியாது. சமையல் அறையில் சிலிண்டரை வைக்கும் போது அந்த அறையில் மின்சாதன பொருள் களை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். மின்சாதன பொருள்களில் எப்போ தேனும் ஏற்படும் மின் அழுத்த ஏற்றதாழ்வில் சிலிண்டரிலும் கசிவை உண்டாக்கி ஆபத்தை ஏற்படுத்திவிட வாய்ப்பு உண்டு. ஒரு சிலிண்டருக்கு அருகிலேயே இன்னொரு சிலிண்டரை வைக்க வேண்டாம்.

தற்போது மாடுலர் கிச்சன் என்ற பெயரில் சிலிண்டரை மரத்தால் ஆன கபோர்டு இருக் கும் இடத்தில் வைத்து மூடிவிடுவார்கள். இதனால் சிலிண்டரில் இருந்து வாயு கசிந்தாலும் அது வெளியே தெரிவதில்லை. அதனால் சிலிண்டரை காற்றோட்டமான இடத்தில் நிற்க வைக்க வேண்டும். சிலர் சிலிண்டரை செங்குத்தாக வைப்பதும் கூட விபத்துக்கு காரணமாகிவிடக்கூடும்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin