ஒரு வீட்டில் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய இடங்கள் முதலில் பூஜை அறை இரண்டாவதாக சமையலறை மூன்றாவதாக குளியலறை இந்த மூன்று இடங்களையும் எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதை நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தோம் என்றால் எப்போதும் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் நிலவிக் கொண்டிருக்கும். இதுமட்டுமல்லாமல் சேமிப்பும் சிக்கனமும் குடும்பத்திற்கு மிகவும் அவசியம். இவை இரண்டையும் எவ்வாறு தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொள்ள இப்பதிவினுள் செல்லுங்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் சமையலறையை எவ்வாறு தூய்மையாக வைத்திருப்பது என்று பார்ப்போம். சிறிய சிறிய விஷயங்களை நாம் செய்வதன் மூலம் நமது சமையலறை எப்போதும் சுத்தமாக இருக்கும். பார்க்கும்போதே நமக்கும் நிறைவாக இருக்கும். நமக்கு சமையலறையில் பெரும் பிரச்சனையாக இருப்பது நாம் சமைப்பதினால் உண்டாகும் எண்ணை பிசுக்கு. இதனை நாம் எவ்வாறு சரி செய்வது என்பதை பார்ப்போம்.

சமைப்பதற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் ஊற்றி வைக்கும் பாத்திரத்தை வெறும் தரையில் வைக்காமல் அதன் அடியில் ஒரு சிறிய தட்டை வைத்து வையுங்கள். எண்ணை சிந்தினாலும் அது தரையில் படாமல் தட்டிலேயே இருக்கும். அடுத்தபடியாக சமைத்து முடித்த பின்னர் அடுப்பை சுற்றி உள்ள இடத்தையும் ஒரு ஈரத் துணியை வைத்துத் துடைத்து விட்டால் அந்த இடம் சுத்தமாக இருக்கும்.

சுத்தம் செய்வதற்காக நாம் பணம் செலவழித்து லிக்விட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே அதனை சுலபமாக செய்யலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் டீ தூள் போட்டு நன்கு கொதிக்க வைத்து பின்னர் அதனை ஆற வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதனை நமது சமையலறையில் அடுப்பு மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் ஸ்பிரே செய்து துடைத்தால் உடனே சுத்தமாகிவிடும். இதனை பயன்படுத்தி பாருங்கள் இதற்காக தனியாக செலவு ஏதும் செய்ய வேண்டாம். இந்த ஸ்பிரேவை வைத்து பிரிட்ஜ்யையும் தூய்மை செய்யலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin