50 வயதை கடந்த பெரும்பாலானோருக்கு மூட்டு வலி என்பது மிக சாதாரணமாக வரக்கூடிய ஒரு நோய் ஆகி விட்டது. எலும்பு தேய்மானமே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. முற்காலத்தை போல அல்லாமல் நமது உணவு பழக்கத்தில் இப்போது பல மாறுதல்கள் உள்ளதாலேயே இது போன்ற நோய்கள் இப்போது பரவலாக காணப்படுகிறது. சித்த மருத்துவம் மூலம் மூட்டு வலியில் இருந்து விடுபட சில எளிய குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புளிய மரத்தின் நிழலில் கூட நிற்க கூடாது என்று சொல்லும் பெரியவர்கள் மூட்டுகளில் வீக்கமும் வலியும் தொடர்ந்து இருந்தால் அந்த புளிய இலைகளை கொண்டு தான் வைத்தியம் செய்வார்கள். மருத்துவ குணம் நிறைந்தவை புளிய மரம் என்றாலும் கடும் விஷம் கொண்ட ஜந்துக்கள் வாழும் இடம் என்பதால் இதை யாரும் வீடுகளில் வளர்ப்பதில்லை.

புளிய மரத்தின் நிழல் ஆகாது என்றாலும் புளிய மரத்தின் இலை சிறந்த மருந்துபொருளாக பயன்படுத்தப் படுகிறது. இது ஆயுர்வேதமருத்துவத்திலும் சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறது. வீட்டில் பெரியவர்கள் புளிய இலை கொழுந்தை பறித்து அதை துவையல் கூட்டு செய்து தருவார்கள். இது கண் தொடர்பான குறைபாட்டை நீக்கும்.

கடுகு, சாம்பிராணி, கஸ்தூரி மஞ்சள் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து சூடு படுத்தி பின் அதில் சிறிது கற்பூரம் கலந்து வெது வெதுப்பாக வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்றவை குறையும். மூட்டு வலி வாதத்தால் வந்தாலும் , வாயு குறைபாட்டால் வந்தாலும் , சுளுக்கு ஏற்பட்டாலும் இவை கால் மூட்டுகளில் ரத்தக்கட்டு, வீக்கம் போன்றவற்றை குணப்படுத்த புளிய இலை வைத்தியம் கைகொடுக்கும். எளிதாக கைகொடுக்கும் இந்த புளி வைத்தியத்தை எல்லோரும் செய்யலாம். மூட்டு வலி உடனடியாக குறைய தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் சிறிதளவு கற்பூரத்தை கலந்து பின் வெதுவெதுப்பாக வலி இருக்கும் இடத்தில் நன்கு தேய்த்தால் உடனே வலி குறையும்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin