விந்து வெளியேறும் போது ஆண்குறியிலிருந்து வெளிவரும் மேகமூட்டமான வெள்ளை திரவமாகும் செமன் . இந்த விந்து செல்கள் ஸ்பெர்மடோசோவா என்றும் அழைக்கப்படுகிறது. இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அவற்றின் தன்மையினால் எப்படி ஆண்களின் ஆரோக்கியத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும் என்று பார்க்கலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விந்தணுக்கள் என்பது விந்து செல்கள் நிறைந்த செமினல் திரவத்தால் ஆனது. ஒவ்வொரு முறை விந்து வெளியேறும் போதும், ஆண்குறியிலிருந்து சுமார் 100 மில்லியன் விந்தணுக்கள் வெளியேறுகின்றன. விந்தணுக்கள் உற்பத்தியாகி அங்கிருந்து விந்து செல்கள் எபிடிடிமிஸ் எனப்படும் ஒரு சுருள் குழாயில் நுழைகின்றன. அவை டெஸ்டிகல்ஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து ஹார்மோன்களின் உதவியால் விந்து உயிரணுக்கள் முதிர்ச்சியடைகின்றன. விந்தணு திரவம் மூன்று உறுப்புகளின் முயற்சியின் வழி உற்பத்தி செய்யப்படுகிறது.

கோப்பர் சுரப்பி: ஒரு பட்டாணி அளவிலான உறுப்பு. இது விந்து உற்பத்தியின் போது லூப்ரிகண்ட்டாகச் செயல்படும். விந்து செல்களை உயிருடன் வைத்திருக்கவும் அதன் பி.எச் அளவை சமநிலையில் வைத்திருக்கவும் உதவி செய்கிறது. புரோஸ்டேட் சுரப்பி: விதைப்பையில் உள்ள வால்நட் பருப்பின் அளவு மட்டுமே கொண்ட சுரப்பியானது விந்தணுக்களை திரவ நிலையில் வைத்திருக்க உதவுகிறது. விந்து திரவத்தை, விந்து செல்களை உற்பத்தி செய்வது, பாதுகாப்பது மற்றும் ஊட்டச்சத்துக்கள், நொதிகள் நிறைந்து உயிர்ச்சத்துடையதாக மாற்றுவது இந்த பகுதி தான். செமினல் வெசிகல்ஸ்: பிரக்டோஸ் நிறைந்த திரவங்களைச் சுரக்கும் இரண்டு குழாய் வடிவ சுரப்பிகள் தான் இந்த செமினல் வெசிகல்ஸ். இந்த பகுதியில் இருந்து தான் இறுதியாக விந்து வெளியேற்றம் நிகழ்கிறது.

சிலருக்கு தாங்கள் அதிகமாக பைனாப்பிள், இனிப்பு ஆகியவை சாப்பிடுகிறவராக இருந்தால் இனிப்பு சுவையும் பைனாப்பிள் சுவையும் தெரியுமாம். இப்படி எந்த சுவைக்குள்ளும் அடங்காமல் மெல்லிய துர்நாற்றத்தோடு விந்து வெளியேறுமானால் இது சிறுநீர்ப் பாதைத் தொற்று, கிளைமீடியா, கொனேரியா போன்ற பாலியல் நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin