முடி உதிர்வு அதிகமாக இருக்கு என்று கவலைப்படுவதால் அவை சரியாகிவிடாது. சரியான பராமரிப்பு இருந்தால் அதை மேற்கொண்டு தீவிரமாகாமல் தடுக்க முடியும். ஏற்கனவே மெலிந்த கூந்தலை கொண்டிருப்பவர்கள் முடி அடர்த்தியாக்கும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் தினமும் ஷாம்பு கொண்டு தலைக்கு குளிப்பதும் அதிக ரசாயனம் கலந்த பொருள்களை தயாரிப்பதும் கூட முன்கூட்டியே நரையையும் முடி மெலிவதையும் உண்டாக்கிவிடுகிறது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முடியை குழந்தை போன்று பராமரிக்க வேண்டும். அப்போது தான் முடி வலுவாக அடர்த்தியாக மாறும். இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் பொருள்களே உதவும். உங்கள் மெலிந்த முடியை அடர்த்தியாக்கும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம். தினசரி எண்ணெய் வைக்காவிட்டாலும் வாரத்தில் இரண்டு நாட்கள் மெலிந்த முடிக்கு மசாஜ் தேவை. இந்த மசாஜ் எண்ணெய் வீட்டிலேயே தயாரியுங்கள். சுத்தமான தேங்காயெண்ணெய் அல்லது நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இது உச்சந்தலையை குளிர்ச்சியாக வைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்க செய்யும்.

நெல்லிக்காய் கலந்த தேங்காயெண்ணெய், வெந்தயம், கருஞ்சீரக விதைகள்,கறிவேப்பிலை சேர்த்த எண்ணெய் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை காய்ச்சி கண்ணாடி பாட்டிலில் வைத்து வாரத்தில் இரண்டு நாட்கள் தவிர்க்காமல் கூந்தலுக்கு மசாஜ் செய்ய வேண்டும். பிறகு தலைக்குளியல் மேற்கொள்ளலாம். வாரத்துக்கு ஒரு முறையாவது ஹேர் பேக் பயன்படுத்துங்கள். சமையலறையில் இருக்கும் பொருள்களே போதுமானது. முட்டையின் மஞ்சள் கரு, கொத்துமல்லி, இலைகள், கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் வெங்காயச்சாறு என இருக்கும் பொருள்களை கொண்டு ஹேர் பேக் தயாரிக்கலாம். இது முடி மெலிவதை தடுக்கிறது மற்றும் அதை வலிமையாக்குகிறது.

முட்டையின் மஞ்சள் கரு எலுமிச்சை சாறு சேர்த்தால் வாடை குறையும். அதற்கு பதிலாக கொத்துமல்லி இலைகளை அரைத்து பயன்படுத்தலாம். வெங்காயம் மற்றும் இஞ்சி சாறு உச்சந்தலையிலும் மயிர்க்கால்களிலும் நுனி வரையிலும் தடவலாம். கறிவேப்பிலை இன்னும் நன்மை பயக்கும். முன்னோர்கள் கூந்தலுக்கு வலு கொடுக்க கறிவேப்பிலையை தான் பயன்படுத்துவார்கள்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin