இன்று நாம் அனைவரும் வாழக்கூடிய வாழ்க்கை முறையில் பலருக்கும் பலவிதமான வியாதிகள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன. நமக்கு அதை நினைத்து கவலைப்பட கூட நேரம் இல்லாமல், அதற்கு அந்த வியாதியின் பெயர் சொல்லி மருந்து கடைகளில் சென்று அதற்கான மருந்தை வாங்கி உபயோகித்து மற்ற வேலைகளை பார்க்க போய்க்கொண்டு இருக்கிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆங்கில மருந்துகளில் உள்ள பக்கவிளைவுகளை பற்றி புரிவதில்லை.அப்படியே புரிந்தாலும் உடனடியாக குணமாகிறது என்பதால் வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனடியாக அதற்கான ஆங்கில மருந்துகளை உட்கொண்டு வருகிறோம். அதுவும் வலி போன்ற பிரச்சனைகள் ஏதாவது ஏற்பட்டால் உடனே வலிநிவாரணி மாத்திரைகளை பலரும் கொண்டு வருகிறார்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பல்வலி தலைவலி ஏதாவது இருந்தால் உடனடியாக ஒரு வலி நிவாரணியை மட்டுமே உட்கொண்டு விட்டு தங்கள் வேலையை கவனிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் அதில் உள்ள பக்க விளைவுகள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும். அதிகமாக வலி நிவாரணி எடுத்துக்கொள்ளும் பொழுது நம் கிட்னியை பாதிக்க செய்யும். எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்காலிக தீர்வு முடிவு ஆகாது. ஒரு நோய் வந்தால் அது எதனால் வருகிறது, அதை நிரந்தரமாக குணப்படுத்த என்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று தான் சர்க்கரை வியாதியும்.

சர்க்கரை வியாதி முழுமையாக குணப்படுத்த முடியாது என்று கூறுவார்கள். இதனால் வாழ்க்கை முழுவதும் அதற்கான ஆங்கில மருந்துகளை உட்கொண்டு இருப்பார்கள். மருந்தை நிறுத்தியவுடன் மீண்டும் சர்க்கரை வியாதி தலைதூக்க ஆரம்பித்து விடும். எனவே அந்த மருந்தை வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து எடுத்துக்கொண்டே வருகிறார்கள் பலரும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin