பிரியாணி இலை பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. இதை நீங்கள் டீயில் சேர்க்கும் போது அமுதத்தை விட உங்களுக்கு அதிகமான நன்மைகளை அளிக்கிறது. இந்த பிரியாணி இலை தேஜ் பட்டா என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் இந்திய சமையலறைகளில் பயன்படுத்தப்படும் மூலிகை ஆகும். இந்த இலைகள் நறுமணத்தால் நிறைந்தவை. இந்த பிரியாணி இலையை நம் பராம்பரிய சமையல்களில் பயன்படுத்துவது உண்டு. பிரியாணி, பருப்பு மக்கானி, கறி, புலாவ், சூப் போன்றவற்றின் சுவையை இது உயர்த்துகிறது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரியாணி இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, சி, இரும்பு, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இது இரைப்பை குடல் பிரச்சினைகளை போக்குகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள், ஆன்டிடியாபெடிக், டையூரிடிக் மற்றும் பசியின்மை தூண்டுதலாக செயல்படுகிறது. உங்க தேநீர் நேரத்தை சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்ற நீங்கள் நினைத்தால் பிரியாணி இலை டீயை தேர்ந்தெடுங்கள்.

ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் பயோ கெமிஸ்ட்ரி அண்ட் நியூட்ரிஷனில் ஜனவரி 2009 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பிரியாணி இலை டீ, நீரிழிவு நோயாளிகளின், குளுக்கோஸ் மற்றும் லிப்பிட் புரதத்தை மேம்படுத்துகின்றன. எனவே டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. பிரியாணி இலைகள் இரைப்பை குழாயை தூண்டுவதன் மூலமும், சிறுநீர் கழிப்பதை ஊக்குவிப்பதன் மூலமும் செரிமானத்தை மேம்படுத்துகின்றன.

மலச்சிக்கலை தடுக்கிறது. இதில் பொட்டாசியம் இருப்பது இதயத்திற்கு நல்லது. ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் இரும்புச் சத்து இவற்றின் சக்தி வாய்ந்த கலவையாக உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் இதய துடிப்பை குறைப்பதற்கும் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவுகிறது. ஏனெனில் பிரியாணி இலை டீயில் விட்டமின் சி இருப்பது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு சிறந்தது. இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது தொற்றுநோய்களை விரட்டுகிறது. பிரியாணி இலை டீ வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், எடை இழப்புக்கு உதவுகிறது. மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்க உடலை வீக்கத்தில் இருந்து பாதுகாக்கின்றன.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin