மல்லிகைப்பூ சீசன் என்றாலும், வீட்டிலேயே செடி வைத்து பராமரித்து வளர்த்து வந்தாலும், அதிலிருந்து மொட்டாக பரித்த மல்லிகை பூவை கட்டி, எப்படி ஒரு வாரத்திற்கு பிரிட்ஜில் வைத்து, வாடாமல் பார்த்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றியும், ஃபிரிட்ஜ் இல்லாதவர்களும் இந்தப் பூவை வாடாமல் வைத்துக் கொள்ளலாம். அது எப்படி என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மல்லிகைப் பூவை வாங்கிய பின்பு, அந்த மொட்டுக்கள் விரிவதற்க்குல் பூக்களை தொடுத்து விட வேண்டும். அதன் பின்பு, லேசாக தண்ணீர் தெளித்து, ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, சுருட்டிக் கொள்ள வேண்டும். அப்படிச் சுருட்டும் போது, அதன் உள்ளே காற்று இருக்கக்கூடாது. காற்று இருந்து, பலூன் போன்று, அந்த பிளாஸ்டிக் கவரானது, உப்பியிருந்தால் அந்த காற்றை எல்லாம் வெளியே எடுத்துவிட்டு, சுற்றிக் கொள்ளுங்கள். மீண்டும் மற்றொரு கவரில், இந்தக் கவரை போட்டுக் கொள்ள வேண்டும். மொத்தமாக இரண்டு பிளாஸ்டிக் பைகளில் மல்லிகைப் பூவைப் போட்டு, அதன் பின்பு சில்வர் கன்டெய்னரில் போட வேண்டும். காற்று புகாத சில்வர் டப்பா.

காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில், போட்டு வைக்கலாம். இருப்பினும், சில்வர் டப்பாவில் போட்டு வைத்தால் சில மணிநேரங்கள் மின்சாரம் இல்லை என்றாலும் பூ, ஃப்ரிட்ஜில் வாடுவதற்கு வாய்ப்பு இல்லை. வீட்டில் ஃபிரிட்ஜ் இல்லாதவர்கள், ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதன் மேல் ஒரு சிறிய கிண்ணத்தை மிதக்க வைக்க வேண்டும்.

ஈரமான வெள்ளைத் துணியில் இந்த மல்லிகைப் பூவை வைத்து சுருட்டி, மிதக்க வைத்திருக்கும் கிண்ணத்தின் மேல் வைத்து விட்டால் போதும். எதையும் போட்டு மூடி விடக்கூடாது. வெயிலில் வைக்க கூடாது. இரண்டு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை இலேசான தண்ணீரை தெளித்து வைத்தால், போதும் மூன்று நாட்கள் வரை பூக்கள் மலராமல் மொட்டாக வாடாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin