வீட்டில் தரித்திரம் பிடிக்க நிறைய காரணங்கள் இருந்தாலும் நாம் சில கவனக் குறைவுகளால் செய்யும் இந்த சில காரியங்கள் தான் மிக முக்கியமாக அமைகின்றன. எந்த இடத்தில் எதை வைக்க வேண்டுமோ! அந்த இடத்தில் அதை வைக்க வேண்டும். அலட்சியம் மற்றும் நேரமின்மை காரணமாக நாம் செய்யும் இந்த சில காரியங்களால் தான் தரித்திரம் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றன. தரித்திரம் பற்றி சாஸ்திரம் கூறுவது என்ன? தலைவாறும் சீப்பு எந்த இடத்தில் வைக்க வேண்டும்? அப்படி வைக்காவிட்டால் என்ன ஆகும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தலைமுடி, நகம், நாம் உடுத்திய அழுக்குத் துணி, சாப்பிட்ட எச்சில் பாத்திரம் ஆகியவற்றின் மூலம் தரித்திரம் ஒரு வீட்டில் குடி கொள்கின்றன. சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களை காய விடுவதன் மூலம் தரித்திரம் வீட்டில் குடி கொள்ளும். இதனால் கடன் பிரச்சனைகள் மேலோங்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் பண பற்றாகுறை ஏற்பட்டு, கடன் வாங்க வேண்டிய நிலை வந்தால் அதற்கு நம்மிடம் தரித்திரம் இருக்கிறது என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் இல்லை. வீட்டில் இருக்கும் இந்த தரித்திரத்தை வெளியேற்ற நாம் செய்யும் சில தவறுகளை திருத்திக் கொள்வது அவசியமாக இருக்கின்றன. அதில் மிக முக்கியமானதாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் தலைவாறும் சீப்பு! எந்த இடத்தில் அதை வைக்க வேண்டும்? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

உடுத்திய பழைய துணிகளை துவைப்பதற்கு உரிய இடங்களில் தான் நாம் வைப்பது வழக்கம். கண்ட இடங்களில் போட்டு வைத்தால் அங்கு தரித்திரம் தாண்டவமாடும் வாய்ப்புகள் உள்ளன. அதே போல நீங்கள் தலைவாறிய சீப்பை கண்ணாடிக்கு பக்கத்தில் தான் வைக்க வேண்டும். கண்ணாடியை பார்த்து தான் தலையை வருகிறோம். அதை மீண்டும் அந்த இடத்திலேயே வைப்பதால் நிறைய நன்மைகள் உண்டாகும். திடீரென அவசரத்தில் எங்காவது வைத்து விட்டு தேட வேண்டிய அவசியம் இல்லை. அதை விடுத்து அலட்சியமாக கண்ட இடங்களில் வைத்து விட்டால் அங்கு தரித்திரம் அதிகரிக்கத் துவங்கி விடும்.

இதனால் வீட்டில் அனாவசியமான பிரச்சனைகளும், கடன் தொல்லைகளும், பொருள் இழப்புகளும் கூட ஏற்படும் என்கிறது சாஸ்திரம். தலைமுடியை வாரி விட்டு அதனை அப்படியே வீடு முழுவதும் பறக்க விடுவது, சீப்பில் இருக்கும் தலைமுடியை எடுக்காமல் வீட்டில் கண்ட இடங்களில் போட்டு வைப்பது போன்றவை கட்டாயம் தரித்திர நிலையை குறிப்பவை ஆகும். வீட்டில் தலைமுடி சுற்றிக் கொண்டிருந்தால் அந்த வீட்டில் எப்படி மகாலட்சுமி ஆனவள் நுழைய முடியும்? மகாலட்சுமி நுழைவதற்கு தடை ஏற்படும் பொழுது அங்கு வருமான பிரச்சனை, கடன் பிரச்சனை, சண்டை, சச்சரவுகள் எல்லாம் தானாகவே படை எடுக்க ஆரம்பிக்கும்.

By admin