நம் குடும்பத்தின் நன்மைக்காக, நாம் செய்யும் பூஜை புனஸ்காரங்களும், பரிகாரங்களும் முழுமை அடைந்தால் தான், நம் கஷ்டத்திற்கு தீர்வு கிடைக்கும். ‘நான் செய்யாத பரிகாரமே கிடையாது. நான் செய்யாத பூஜையே கிடையாது. ஆனால் எதற்காக எனக்கு இவ்வளவு கஷ்டம்.’ என்று இன்றளவும் இறைவனிடம் புலம்பி தீர்ப்பவர்கள் அதிகமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த சின்ன குறையை கூட நிறையாக மாற்றும் ஒரு விஷயம் தான் இது. வீட்டை துடைப்பது கூடவா பிரச்சனை! என்று நீங்கள் சிந்திக்கலாம். ஆனால் இந்தக் குறையை கூட நம் விட்டு வைக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிவு. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நம் வீட்டில் எந்த ஒரு பூஜையை செய்வதற்கு முன்பாகவும் வீட்டை துடைத்து, சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்திருப்போம். அப்படி சுத்தம் செய்வது எதற்காக? நம் வீட்டில் செய்யப்படும் நல்ல காரியமானது எந்த ஒரு எதிர்மறை ஆற்றலினாலும் தடை பட்டு விடக் கூடாது. எந்த ஒரு தீட்டினாலும் அபசகுணம் நடந்து விடக்கூடாது, என்பதற்காகத்தான். இந்த சுத்தகத்தை முழுமையாக நாம் செய்ய வேண்டுமா? வேண்டாமா?

சில பேர் தங்களுடைய வீடுகளை துடைக்கும் போது தண்ணீரில் கல் உப்பு ஒரு கைப்பிடி அளவு போட்டு துடைப்பார்கள். இது மிகவும் நல்ல பழக்கம். ஆனால் இந்த பழக்கத்தின் மூலம் நம் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டியும், கண்ணுக்கு தெரியாத கிருமிகளும் அழிந்துவிடும். ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றலை முழுமையாக போக்கும் சக்தி இதற்கு முழுமையாக கிடைக்காது. நம் வீடு துடைக்கும் தண்ணீரில் இந்த கல் உப்பை சேர்க்கும்போது, சிறிதளவு மஞ்சள் பொடி,

ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம், ஒரு ஸ்பூன் கோமியம் இவைகளையும் சேர்த்து வீட்டை துடைப்பது நல்ல பலனைத்தரும். குறிப்பாக நாளை நம் வீட்டில் பூஜை செய்யப் போகிறோம் என்றால் அதற்கு முன்நாள் இப்படித்தான் வீட்டை துடைக்க வேண்டும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin