கோடைக்காலம் உச்சத்தை அடைந்திருக்கிறது. எப்போதும் இல்லாத வெயில் தமிழ்நாட்டை வாட்டி வதைக்கத் தொடங்கியிருக்கிறது. ஃபானி புயல் வேறு ஈரப்பதத்தை உறிஞ்சிச் சென்றுவிட்டது. இந்த வெயிலிலிருந்து(ஷிuனீனீமீக்ஷீ) தப்பித்துக்கொள்ள நாம் படாதபாடுபடுகிறோம். வெளியே வெப்பம் குறைந்தாலும் வீட்டுக்குள் வெப்பம் குறைவதில்லை. பகலில் அடித்த வெயில் இரவில் வீட்டுக்குள் வெப்பமாகக் கனன்று கொண்டிருக்கிறது. இந்த வெப்பத்தின் தாக்குதலில் இருந்து வீட்டைப் பாதுகாப்பது எப்படி எனப் பார்ப்போம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டின் மேற்கூரையிலிருந்துதான் வீட்டுக்குள் வெப்பம் இறங்கும். அதனால் வீட்டின் மேற்கூரையில் படும் வெயிலைக்குறைக்க இப்போது டைல்ஸ் பதிக்கும் பழக்கம் இருக்கிறது. வெள்ளை நிறத்திலான டைல்ஸ் வீட்டுக்குள் கடத்தப்படும் வெப்பத்தின் அளவைக் குறைக்கிறது. டைல்ஸ் போல மேல் கூரைத் தளத்தில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கும் வழக்கம் இருக்கிறது. வெள்ளை நிறம் வெப்பத்தைக் கடத்தும் தன்மை அற்றது. அதனால் வீட்டுக்குள் வெப்பம் கடத்தப்படுவது குறையும்.


முன்பெல்லாம் மொட்டை மாடியின் மீது படும் வெயிலைக்குறைப்பதற்காக தென்னை மட்டைகளை வெட்டிப் போடுவார்கள். வெயிலைத்தென்னை மட்டை உறிஞ்சிக் கொள்வதால், வீட்டுக்குள் வெயில்இறங்குவது குறையும். இது ஓரளவு பலன் தந்தாலும் அதனால் முழுப் பயன் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. இப்போது அதற்கு மாறாக மாடியில் தோட்டம் போடுவது நல்ல யோசனையாக முன்வைக்கப்படுகிறது. இதன் மூலம் வெயிலைச் செடிகள் உறிஞ்சுக் கொள்வதால் வீட்டுக்குள் வரும் வெப்பமும் குறைகிறது. அதே நேரம் செடிகளும் வெயிலைஉட்கொண்டு வளர்கிறது. அதனால் நமக்கு இரட்டிப் பலன் கிடைக்கும்.

ஜன்னல் திரைகள் அடர் நிறத்தில் இருந்தால் அவற்றை மாற்றி மென்நிறத் திரைகளை இட்டுப் பாருங்கள். உங்கள் வீடு சற்றே குளிர்ச்சியானதாக மாறிவிடும். மேலும் வெற்றிவேர் திரைகளைப் பயன்படுத்தினால் வீட்டுக்குள் ஏசி வைக்க வேண்டிய அவசியம் இல்லை எனச் சொல்லும் அளவுக்குக் குளிர்ச்சி வரும். அந்த வெற்றிவேர் மீது லேசாகத் தண்ணீரைத் தெளித்துவிட்டால் வீட்டுக்குள் நுழையும் காற்று குளிர்ச்சி அடைந்து நல் நறுமணத்தையும் தரும். இதற்கு மாற்றாக மூங்கில் திரைகளும் நல்ல பலன் தரும் எனச் சொல்லப்படுகிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin