தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவிடும். இந்த தேங்காயில் பல அத்தியாவசியமான சத்துக்களும் உள்ளன. அதுமட்டுமின்றி தேங்கயில் இருக்கும் காப்ரிக் ஆசிட் மற்றும் லாரிக் ஆசிட்டால் உடல் எடை குறையக்கூட வாய்ப்புகள் உண்டு. இது போல தேங்காய் எடுத்துக்கொள்வதால் என்னென்ன நன்மைகள் இருக்க்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து உள்ளது.மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம்.

நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்திடும். முற்றிய தேங்காய் ஆண்மை பெருக்கியாக செயல்படும். இதிலிருக்கும் வைட்டமின் சி முதுமையைத் தடுத்திடும். அதே நேரத்தில் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin