குழந்தைகள் என்றில்லை, இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும், நவீன உணவுக் கலாச்சாரத்திற்கு, அடிமையாகிவிடுகிறார்கள். பிரேக் இடைவேளைகளில், நொறுக்குத்தீனியுடன் காபியோ அல்லது, மென்பானத்தையோ பருகினால்தான், சிலருக்கு, மாலைநேரம் இனிமையாக இருக்கும் என்ற அளவுக்கு, ஜங்க் ஃபுட்களுக்கு, அடிமையாகிவிட்டார்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனிதரின் பலவீனத்தை, ஜங்க் ஃபுட் தயாரிப்பாளர்கள், நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கவனித்தால் தெரியும், இதுபோன்ற பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகள், அல்லது முன்னரே சமைத்த உணவுகளில் எல்லாம், இனிப்பு, உப்பு, மற்றும் காரச் சுவைகள் எல்லாம், ஒரு வித்தியாசமான சேர்க்கையில் இருக்கும். முன்னொரு காலத்தில், சுவைத்த கிராக் ஜாக் மற்றும் சால்ட் பிஸ்கெட்களின் சுவையை, முடிந்தால், ஞாபகப்படுத்திப் பாருங்கள்.அதில் உப்பு கூடுதல் என்றும் சொல்லமுடியாது, குறைவு என்றும் சொல்லமுடியாது, அதேபோலத்தான் இனிப்பும். இதுபோன்ற மாறுபட்ட சுவைகளை சுவைத்தபின், அவற்றை மீண்டும், கொறிக்கத் தூண்டும் எண்ணங்களிலிருந்து, விடுபடுவது, கடினம், எனவேதான், மக்கள், அவற்றுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். ஆல்கஹால், ஜர்தாபாக்குகள் போன்ற, போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் போல.

வழக்கமான, உணவு நேரத்தை முன்கூட்டி, மாற்றியமைப்பது இந்த ஜங்க் ஃபுட் அடிமைத்தனத்திலிருந்து மீள மிகச்சிறந்த வழியாகும். நாம் மதிய உணவுநேரத்தை, வழக்கமான நேரத்திலிருந்து, சற்று முன்னதாக மாற்றியமைத்துக்கொண்டு, காய்கறிகள், பழவகைகள் நிரம்பிய சத்தான சாப்பாட்டை, ருசித்து உண்ணும்போது, வயிறு நிரம்பிவிடும். இதனால், மாலைநேர இடைவேளைகளில், பிட்சா, சான்ட்விச், கேக், பானி பூரி, ப்ரெட் ஆம்லெட், பிரெஞ்ச் பிரைஸ் போன்ற நொறுக்குத்தீனி வகை உணவுகளை சாப்பிடுவதில், ஏற்படும் ஈர்ப்பு, தானாக, குறைந்துவிடும். அந்தநேரங்களில் நண்பர்கள் அவர்களிடம், அவர்களுக்குப் பிடித்த இனிப்பு பதார்த்தங்களைக் கொடுத்தால்கூட, வயிறு ஃபுல்லாக இருக்கிறது, வேண்டாம் என்று மறுத்துவிடுவார்கள்.

சமச்சீரான சத்துணவை உண்பதன்மூலம், நொறுக்குத்தீனிகளில் உள்ள ஆர்வத்தைக் குறைக்க முடியும். மேலும், பிரெட் ஆம்லெட், சான்ட்விச் மற்றும் பிட்சா போன்ற துரித உணவின் வாசனையால் ஈர்க்கப்படுவது, நின்றுவிடும். அவற்றைக் கண்டால்கூட உண்பதில் ஆர்வமின்மையும், அவற்றைப்பற்றிய பேச்சுக்களில் ஈடுபாடின்மையும், தானாக ஏற்பட்டுவிடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin