நாம் சாப்பிட கூடிய ஒவ்வொரு உணவுகளுக்கு பின்னும் பல வித அறிவியல் பூர்வ தன்மைகள் உள்ளன. ஒரு சில உணவுகள் உடலுக்கு நன்மையை தர கூடிவையாக இருக்கும். ஒரு சில உணவுகள் உடல் நலத்தை கெடுப்பவையாக இருக்கும். இவற்றில் உடல் நலத்திற்கு நன்மை தர கூடிய உணவுகளில் இந்த பாதாமும் அடங்கும். நீங்கள் தினமும் வெறும் 4 பாதாம் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏராளமான நன்மைகள் நடக்கும். அத்துடன் பல வகையான வியாதிகளில் இருந்தும் இவை விடுவிக்க செய்யும். தினமும் 4 பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் என்பதை இந்த பதிவில் அறிவோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாதாமில் பல வகையான நன்மைகள் உள்ளன. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் இது சிறந்த தீர்வை தரும். 4 பாதாமை தினமும் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பிரச்சினை முதல் வயது முதிர்வு வரை எல்லாவித நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இது விளங்குகிறது. தினமும் 4 பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் முதல் பயன் உங்களின் கொலஸ்ட்ரால் குறைவதே. குறிப்பாக ரத்தத்தில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை இவை குறைய வைக்கிறது. மேலும், உடல் பருமனையும் கூடாமலும் இந்த பாதாம் பார்த்து கொள்கிறது.

நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருப்பது தான். ஆனால், உங்களின் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அண்ட் ஆசையை நிராசையாக மாற்றுகிறதா…? இனி உங்களின் முக சுருக்கங்களை போக்குவதற்கு இந்த 4 பாதாம்கள் போதும். இதில் உள்ள மக்னெஸ் சுருக்கங்களை மறைய வைக்கிறது. பாதாமில் எது சிறந்தது என்பதே பலரின் கேள்வியாக இருக்கும். குறிப்பாக பாதாமை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு அதிக நலனை தருமா..? அல்லது வறுத்து சாப்பிட்டால் அதிக பலனை தருமா..? என்பது பலரின் கேள்வியாக உள்ளது. உண்மையில் பாதாமை அப்படியே வறுத்த பாதாமை விட பச்சையாக சாப்பிட்டால் அதிக பயன்கள் கிடைக்குமாம். மேலும், நீரில் ஊற வைத்த பாதாமையும் சாப்பிடுவது சிறந்தது.

ஆரோக்கியமான இதயம் வேண்டுமென்றால் அதற்கு ஏராளமான வித்தைகளை எல்லாம் செய்ய வேண்டியதில்லை. மாறாக 4 பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால் நன்று. பாதாமில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், மெக்னீசியம், காப்பர் போன்ற ஊட்டச்சத்துக்கள் ரத்த நாளங்களில் சீரான ரத்த ஓட்டத்தை வைத்து, இதய நோய்களில் இருந்து காக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin