அலங்காரத்துக்கென்று பயன்படுத்தப்படும் பாப்பி மலரின் செடி விதைகளிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. இந்த விதைப்பைகள் நன்றாக காயவைக்கப்பட்டு அதிலிருந்து தயாரிக்கப்படுவது தான் கசகசா. பலரும் இது போதை பொருளாகவே பார்க்கிறார்கள். ஆனால் இவை போதை தருவதில்லை. விதைப்பையில் வரும் பால் ஓபியம் என்றழைக்கப்படுகிறது. இவை தான் போதை தருவனவாக இருக்கிறது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளில் கசகசாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இதை அசைவ உணவுகளிலும் ஆண்களுக்கு வீரியம் அளிக்கும் உரமாகவும் கசகசா பயன்படுத்தப்பட்டது. தற்போது இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதை அளவாக தேவைக்கு பயன்படுத்தினால் பல மருத்துவ நன்மைகளை தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தெரிந்துகொள்வோம்.

25 வருடங்கள் முன்பு வரை, ஏன் இன்றும் பல கிராமங்களில் புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு இரவு அல்லது காலை வேளையில் கசகசா, பாதாம் சேர்த்த பால் தருவது வழக்கம். பாதாமை ஊறவைத்து தோல் உரித்து அதனுடன் கசகசா சேர்த்து அரைக்க வேண்டும். பிறகு பாலை கொதிக்க வைத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க தருவார்கள். இல்லற வாழ்வில் ஈடுபாடு வருவதோடு ஆண்மையை அதிகரிக்கவு பாலியல் ஆசையை தூண்டவும் கசகசாவிதைகள் பெரிதும் உதவுகின்றன.

திருமணம் முடிந்த முதல் ஒரு மாதம் வரை இந்த பாலை கொடுப்பார்கள். ஆண்மை குறைபாடு இல்லறத்தில் ஈடுபாடில்லாதவர்களுக்கு தொடர்ந்து ஒருவாரம் வரை இந்த கசகசா பாலை குடித்து வந்தால் உடனடி மாற்றம் தெரியும். கருப்பையில் பெலோப்பியன் குழாய்களை சுத்தம் செய்ய உதவுகிறது. இக்குழாய்களில் இருக்கும் கோழை அல்லது கெட்டியான அடர்த்தியாக இருக்கும் சளியை கரைத்து கருவுறுதலை அதிகரிக்க இவை உதவுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளது. பெலோப்பியன் குழாய்களில் உள்ள குறைபாட்டால் குழந்தை பெறுவதில் சிக்கல் இருந்தால் அந்த குறைபாடை களைவதற்கு கசகசா உதவுவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பெலோப்பியன் குழாய்களில் குறைபாடுள்ள பெண்களில் 29% பெண்கள் வெற்றிகரமாக கருத்தரிப்பு பெற்றுள்ளதாக மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin