பால் பொங்கிய கறை முதல் எண்ணெய் கறை வரை படிந்திருக்கும் அடுப்பை சுத்தம் செய்வது பெரும் தலைவலியாகவே இருக்கும். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த வேலை செய்ய சலித்துகொள்ளவே செய்வார்கள். அடுப்பங்கறை அழகாக இருந்தாலும் சமையல் செய்யும் கேஸ் ஸ்டவ் சுத்தமாக இருக்க வேண்டுமே. எண்ணெய் பிசுக்கும், அழுக்கும் படர்ந்திருக்கும் ஸ்டவ்வில் சுத்தமான சமையல் எப்படி சாத்தியமாகும். அதிக பிரயத்தனம் இல்லாமல் உங்கள் கேஸ் ஸ்டவை எப்படி சுத்தம் செய்வது என்பதை பார்க்கலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தினசரி சமையல் செய்து முடித்தவுடன் கேஸ் ஸ்டவ்வை சுத்தம் செய்வதை வழக்கப்படுத்தி கொள்ளுங்கள். ஒவ்வொரு துளி கறைபடிந்தாலும் அது நாளடைவில் அதிகமான பிசுக்கை தேக்கி வைக்கும். அதனால் ஒவ்வொரு முறை சமையலுக்கு பிறகும் நீங்கள் அடுப்பு மேல் துடைக்க வேண்டும். இதை செய்து வந்தாலே எண்ணெய் பிசுக்கு அதிகம் இருக்காது. இப்போது அதிகம் எண்ணெய் பிசுக்கும் அழுக்கும் கொண்டுள்ள கேஸ் ஸ்டவ்வை எப்படி சுத்தம் செய்வது என்று பார்க்கலாம்.

ஸ்டவ்வின் மீது முதல் அடுக்காக பேக்கிங் சோடாவை பயன்படுத்துங்கள். காகித துண்டு அல்லது கை துண்டு சூடான வெந்நீரில் ஊறவிடுங்கள். பிறகு துண்டை பிழிந்து நீரை வெளியேற்றி பேக்கிங் சோடாவின் மேல் வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து ஸ்டவ்வின் மீது துணியால் கவனமாக சுத்தம் செய்யவும். அடுப்பின் மீது இருக்கும் சமையல் எச்சம் வரை சுத்தம் செய்து ஸ்டவ்வை பளிச்சென்று வைக்கும். ஸ்டவ் மீது எண்ணெய் பசையோடு உணவு எச்சங்களும் ஒட்டியிருக்கும்.

இறுகி இருக்கும் எண்ணெய்பிசுக்குக்கு இந்த முறை உதவும். முதலில் ஈரமான துண்டால் ஸ்டவ் முழுக்க தடவி பிறகு பிளேடால் மென்மையாக கீறல் விடாமல் அழுக்கை சுரண்டி எடுக்கவும். பிறகு ஈரமான துணியில் துடைத்து எடுக்கவும். பிறகு சோப்பு டிஷ்வாஷ் கொண்டு துடைத்து எடுக்கவும். முதல் முறையில் இவை சுத்தமாகாது என்றாலும் வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் இது சுத்தமாகும்.

By admin