நம் முன்னோர்கள் மிக கொடிய நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ காரணமாக இருந்தது அவர்களின் சிறந்த உணவு பழக்கம் தான் முதன்மையான காரணம் ஆகும். உணவு சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சில மருத்துவ குணமிக்க மூலிகைகள் அல்லது மூலிகை பொருட்கள் உட்கொண்டனர். நமது நாட்டின் பாரம்பரியத்தில் எந்த ஒரு விருந்து நிகழ்ச்சியிலும் இறுதியாக “வெற்றிலை” சாப்பிடும் பழக்கம் பல காலமாக பின்பற்றப்படுகிறது. இந்த வெற்றிலை கொண்டு எத்தகைய உடற்குறைபாடுகள், நோய்கள் போன்றவற்றை தீர்க்கலாம் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வெற்றிலை சிறந்த ஒரு வலி நிவாரணியாக இருக்கிறது. உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் நோய்கள், அடிபடுதல் போன்றவற்றால் மிகுந்த வலி ஏற்பட்டு அவதிபடும் நேரங்களில் ஒரு முழு வெற்றிலையை சுத்தம் செய்து வாயில் போட்டு நன்கு மென்று நீரருந்தினால் சீக்கிரத்தில் வலி குறையும். வெட்டு காயங்கள், சிராய்ப்புகள் வீக்கங்கள் போன்றவற்றிற்கு வெற்றிலைகளை நன்கு அரைத்து காயங்களின் மீது பற்று போட்டால் அவை சீக்கிரத்தில் குணமாகும்.
உடலில் வாதம் தன்மை அதிகரிக்கும் போது வயிற்றில் வாயுத்தொல்லை போன்றவை ஏற்படுகிறது. மேலும் சிறு குழந்தைகள் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு, அவர்களை மிகுந்த அவதிக்குள்ளாகும். இச்சமயங்களில் ஒரு சில வெற்றிலைகளை எடுத்து கொண்டு, அதில் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் காட்டி வயிற்றின் மீது வைத்து எடுக்க வேண்டும். இது போல் பத்து நிமிடங்கள் வரை செய்தால் வயிற்றில் இருக்கும் வாயு நீங்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலும், இறுதியில் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் அதிகமிருந்தது. தற்காலங்களில் அதை பெரும்பாலானோர் மறந்து விட்டனர். பலவகையான உணவுகளை சாப்பிடும் போது அந்த உணவில் இருக்கும் பாதகமான பொருட்கள், உணவு துணுக்குகள் போன்றவை பல்லிடுக்குகளில் மாட்டிக்கொள்கிறது. எத்தகைய உணவை சாப்பிட்ட பின்பும், வெற்றிலைகளை நன்கு மென்று அதன் சாறுகள் பற்கள், ஈறுகளில் தங்கியிருக்கும் கிருமிகளை அழிக்கிறது. பற்சொத்தை, பற்கூச்சம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .