நம் வீட்டில் இருக்கும் வெள்ளிப் பாத்திரங்கள், கொலுசு, பூஜைக்கு தேவையான வெள்ளி சாமான்கள் என அனைத்தும் நாளடைவில் நிறம் மங்கி கருப்பாக மாறி விடுவதை நாம் பார்த்திருப்போம். அதை சுத்தம் செய்வது மிகப் பெரிய விஷயமாக நமக்கு இருக்கும். பித்தளை பொருட்களுக்கு பீதாம்பரி தேய்த்தாலே பளிச் சென்று மாறி விடும். ஆனால் வெள்ளிப் பொருட்களுக்கு என்று பிரத்தியேகமாக விற்கப்படும் பொருட்கள் கூட அந்த அளவுக்கு நமக்கு ரிசல்ட் கொடுப்பது இல்லை. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நகை கடைகளில் வேலை செய்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தி தான் வெள்ளிப் பொருட்களை பளிச்சென்று வைத்திருக்கிறார்கள். அதை நாமும் முயற்சி செய்து பார்ப்போம். ஐந்து நிமிடத்தில் ஒரே ஒரு பொருள் கொண்டு புத்தம் புத்தம் புதியதாக நம்முடைய வெள்ளிப் பொருட்களை மாற்றி விட முடியும். அதை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
வெள்ளிப் பொருட்கள் வெளியே வைத்தால் நாம் உபயோகபடுத்தா விட்டாலும் நாளடைவில் காற்றின் மூலம் வரும் மாசினால் கருமை அடைந்துவிடும். அதிலும் பெண்கள் அணியும் கொலுசு அதிவிரைவாக கருமை படர்ந்து பார்ப்பதற்கே நன்றாக இருப்பதில்லை. உடலில் அதிக பித்தம் கொண்டு இருப்பவர்கள் அணியும் கொலுசு அடிக்கடி அதிக கருப்பு அடைந்து விடுவதை பார்த்திருப்போம். இது போன்றவர்கள் மிக மிக சுலபமாக இந்த ஒரே ஒரு பொருளைக் கொண்டு ஐந்தே நிமிடத்தில் தங்களுடைய பழைய கொலுசை புத்தம் புதிய கொலுசாக மாற்றி விடலாம்.
அது போல் பூஜைக்கு பயன்படுத்தும் விளக்கு மற்றும் இதர பொருட்கள் அதிகம் கறுத்துப் போயிருந்தால் இந்த டிப்ஸை பயன்படுத்தினால் கடையில் புதிதாக வாங்கியது போல் பளபளன்னு மின்னும். இதற்கு தண்ணீர் மற்றும் வீட்டிலிருக்கும் எந்த பொருளும் உபயோகிக்க தேவையில்லை. நாம் பற்களுக்கு உபயோகிக்கும் கோல்கேட் டூத் பவுடர் அல்லது வேறு ஏதேனும் டூத் பவுடராக இருந்தாலும் பரவாயில்லை. பற்களுக்கு உபயோகிக்கும் பற்பசையை விட அதாவது பேஷ்டை விட டூத் பவுடர் வெள்ளியின் மீது மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றல் புரியும். அதனால் பற்பசையை உபயோகிக்க வேண்டாம்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .