ஆண்களுக்கு அழகே இந்த தாடிதானே. பார்க்க அழகாக நிவின் பாலி போல தாடி வளரணும்னு யாருக்குத்தான் ஆசை இருக்காது. அதுவும் கருகருவென நம்ம ஸ்டைலுக்கு பிடித்தது போல தாடி வைக்கறது பல ஆண்களோட விருப்பமான ஒன்று. பெண்களுக்கும் அழகான அடர்த்தியான கருமையான தாடி வைத்திருக்கும் ஆண்கள் மீது தனி பிரியமும் ஈர்ப்பும் இருக்கத்தான் செய்யும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அழகிய ஆசைகளை உங்கள் தாடியில் உள்ள நரைமுடிகள் கெடுத்துவிடுகிறதா..? மேலும் கருமையான தாடி இல்லை என வருந்துகிறீர்களா..? கவலையை விட்டுத்தள்ளுங்கள். உங்கள் நரைகள் கொண்ட தாடியை கருமையாக மாற்ற வழிகள் இதோ இருக்கிறது.

தாடியில் நரை வர முக்கிய காரணமாக சொல்லப்படுவது மெலனின் நிறமி குறைவே. அதுவும் பலருக்கு இளம்வயதிலேயே தாடியின் முடிகள் வெள்ளையாக மாறிவிடுகிறது. இதனால் பலர் மன வருத்தத்தோடே எப்போதும் காணப்படுகின்றனர்.

அதோடு ஊட்டச்சத்துக்கள் குறைந்த உணவுகளை உண்பதாலும், காப்பர், ஐயோடின், மற்றும் இரும்பு சத்து குறைவதாலும் தாடியின் முடி வெள்ளையாக மாறுகிறது. மேலும் அதிகமாக மது பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நரை அதிகம் வரக்கூடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin