நம்முடைய சம்பிரதாயத்தில் 1 ரூபாய்க்கு எப்போதுமே ஒரு தனி மதிப்பு தான். இறைவனிடம் கோடி ரூபாயை கொட்டி வேண்டுதல் வைப்பதை விட, ஒரு ரூபாயை காணிக்கையாக முடிந்து வைத்து வைத்து, வேண்டிக் கொண்டால் அதற்கான மகிமையே வேறு. அப்படிப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தை வைத்தும், ஒரு சின்ன வெங்காயத்தை வைத்தும் தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை பலபேர் செய்து பலன் அடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. பலபேருக்கு இருக்கக்கூடிய பண பிரச்சனையை தீர்த்துக் கொள்வதற்கு, பல வகைகளில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் நமக்கு பணம் சேராமல் இருப்பதற்கு எது வேண்டும் என்றாலும் காரணமாக இருக்கலாம். அந்தக் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை தகர்த்தெறிய கூடிய சக்தி இந்த ஒரு ரூபாய் நாணயத்துக்கும், ஒரு சின்ன வெங்காயத்திற்கு உள்ளது. சின்ன வெங்காயத்திற்கு கெட்டதை நம் உடலில் இருந்து இழுத்து வெளியே தள்ள கூடிய சக்தி அதிகமாக உள்ளது.

முதலில் ஒரு சின்ன வெங்காயத்தையும், ஒரு ரூபாய் நாணயத்தையும் உங்களது உள்ளங் கைகளில் வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் தெரியாத அளவிற்கு, உள்ளங்கைகளில் வைத்து, மூடிக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் கைகளை, தலை முதல் கால் வரை, ஏற்ற இறக்கமாக 9 முறை ஏற்றி இருக்க வேண்டும். திடிஸ்டி சுத்தி, போடும் போது மேலிருந்து கீழாக, உடம்பின் மேல் கை படாமல், திருஷ்டி கழிப்பார்கள் அல்லவா? அதே போல்தான் இந்த பரிகாரத்தையும் செய்ய வேண்டும்.

உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் போது, உங்களை யாரும் பார்க்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த பரிகாரத்தை செய்து பலன் அடைந்தால், இந்த பரிகாரத்தின் மூலம் தான், நீங்கள் பலன் அடைந்தார்கள் என்பதையும் வெளியில் சொல்லக்கூடாது. என்ன செய்வது? சில விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலமாக தான், தாந்திரீக முறைகள் நமக்கு பலனைக் கொடுக்கும். வாரம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்வது நல்லது. தொடர்ந்து மூன்று வாரங்கள் செய்து பாருங்கள். உங்களுக்கு எந்த நேரம் சௌகரியமாக இருக்குமோ, அந்த நேரத்தில் பரிகாரத்தை செய்யலாம். உச்சிப் பொழுதில் மட்டும் செய்யாதீர்கள். உங்களுக்கு தடைப்பட்டுவந்த பலவகையான பிரச்சினைகளும், சுலபமான முறையில் கைகூடி வருவதற்கு பல வழிகள், உங்கள் கண்களுக்குத் தென்படும் என்பதில் சந்தேகமே இல்லை. கோடி கோடியாக பணம் கொட்டுகிறதோ இல்லையோ, நிம்மதியற்ற ஒரு சூழ்நிலை உங்களுக்கு இருந்தால், அந்த சூழ்நிலையானது நல்ல முறையில் மாறும் என்பது மட்டும் உறுதி. அட பணக்காரரா ஆகரமோ இல்லையோ? பிச்சைக்காரர்களா மட்டும் ஆடக்கூடாது இல்லையா?

By admin