உடல் நிற்பதற்கும், நடப்பதற்கும், உடலை சமநிலையாக வைக்கவும் உதவுவது பாதங்கள் தான். சுருங்க சொன்னால் உடலை சமநிலையாக வைத்திருக்க உதவுவது பாதங்கள் தான். உடல் நிற்பதற்கும், நடப்பதற்கும், உடலை சமநிலையாக வைக்கவும் உதவுவது பாதங்கள் தான். சுருங்க சொன்னால் உடலை சமநிலையாக வைத்திருக்க உதவுவது பாதங்கள் தான். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனிதன் வாழ்நாளில் அவனது 50 வயது வரையில் சுமார் 75 ஆயிரல் மைல்கள் வரை நடப்பதாக சொல்லப்படுகிறது. நடைபயிற்சி நல்லதே என்றாலும் தொடர்ந்து நடக்கும் போது பாதங்களில் தேய்மானம், காயம், அழுத்தம் காரணமாக தளர்வு போன்ற உபாதைகள் உண்டாக கூடும். இதனால் தரையில் கால் வைக்கவே பலரும் அச்சப்படுவார்கள் பாதங்கள் என்பது முழுமையாக இல்லாமல் குதிகால், கணுக்கால் கால்விரல்களுக்கிடையே உள்ள எலும்புகள் பாதிக்கப்படுவதால் இந்த வலி உண்டாகிறது. ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் பாதவலி அதிகமாகிறது.

இந்த பாதவலி அலட்சியப்படுத்தகூடியதல்ல. ஏனெனில் உடலை தாங்க கூடியதே பாதம் தான் என்பதால் வலி உபாதை இலேசானதாக இருந்தாலும் அதிகமான அவஸ்தையை உண்டாக்ககூடியதே. பாதங்களில் வலி என்பது குதிகால் வலியைக் கொண்டிருக்கும். இவை குதிவாதம் என்று அழைக்கப்படுகிறது. பாதங்களில் கால்விரல்களில் மெல்லிய தசைநாரில் வீக்கம் உண்டாகும் போது, தசைநாரில் அதிக அழுத்தம் ஏற்படும் போது காயங்கள் உண்டாகும் போது இந்த குதிகால் வலி உண்டாகலாம்.

சிலருக்கு குதிகாலிலிருந்து காலை இணைக்கும் தசைநாரில் வீக்கம் உண்டாகும். பாதங்களின் பின் பக்கம் குதிகால் தசைநார் மேல்நோக்கி விரிவடைவதால் பாதவலி உண்டாகும். பின்பகுதியில் இறுக்கம், கடுமையான இடங்களில் ஓடுதல், குதித்தல், வெறும் கால்களில் நடத்தல் போன்றவற்றால் பாதங்களின் பின்பகுதியில் அழற்சி உண்டாகிறது. இவை குதிகால் மற்றும் குதிகால் தசைநாரின் மேல் வலி உண்டாகும். இவை அதிகரிக்கும் போது நடந்தாலும், ஓடினாலும் வலி உபாதை அதிகரிக்கும் பாதங்களில் வீக்கம் உண்டாகும். பாதங்களின் நடுப்பகுதியில் வலி உண்டாககூடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin