தாவரங்களில் பல கோடி வகைகள் இருக்கின்றன. சில தாவரங்கள் உணவாக பயன்படுகின்றன. வேறு சில தாவரங்கள் மருத்துவ மூலிகைகளாகவும், இன்ன பிற பயன்பாட்டிற்கும் உதவுகின்றன. இத்தகைய சில தாவரங்களிலிருந்து எண்ணெய் வகைகளை தயாரிக்க முடிகிறது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த எண்ணெய்கள் பல வகையிலும் மனிதர்களுக்கு உதவுகின்றன. அப்படி சிறந்த மருத்துவ குணங்கள் வாய்ந்த ஒரு எண்ணெய் தான் “ஆமணக்கு எண்ணெய்” அல்லது “விளக்கெண்ணெய்”. இந்த விளக்கெண்ணையின் பல வகையான பயன்பாடுகள் குறித்து இங்கு காண்போம்.

சிலருக்கு எப்போதும் மலச்சிக்கல் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன தான் நவீன மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் அந்த மருந்துகள் வேறுவகையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணையின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது. நடுத்தர வயது முதல் முதியோர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பிரச்சனையாக மூட்டு வலி பிரச்சனை இருக்கிறது. தினமும் சில துளிகள் விளக்கெண்ணையை உடலின் அனைத்து மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் வலி ஏற்படுவது நீங்கும். ஆர்த்ரைடிஸ் போன்ற தீவிர மூட்டுகள் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.

உடலில் சில பகுதிகளில் தசைகள் முறுக்கிக்கொள்வதால் சுளுக்கு ஏற்படுகிறது. மேலும் உடலின் ஏதாவது ஒரு இடத்தில் அடிபட்டாலும் அந்த இடம் வீங்கிவிடுகிறது. விளக்கெண்ணையின் சில துளிகளை வீக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி, அந்த இடத்தின் மீது ஒத்தடம் கொடுக்க வீக்கம் விரைவில் குறையும். எல்லோருக்குமே தலை முடி நன்றாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும் விளக்கெண்ணையின் சில துளிகளை தேங்காய் எண்ணையுடன் கலந்து தலை முடிக்கு தேய்த்து வந்தால் தலை முடி உதிர்வது நிற்கும். மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளும் தீரும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin