உலகில் பெரும்பாலான மனிதர்கள் உண்ணும் முக்கிய உணவுகள் அரிசி அல்லது கோதுமை தானியங்களில் இருந்து செய்யப்பட்டதாகவே இருக்கிறது. வேறு பல வகையான உணவு தானியங்களும் உடலுக்கு தேவையான பல சத்துகளை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அதில் ஒன்று தான் மேற்கத்திய நாடுகளில் அதிகம் பிரபலமான “ஓட்ஸ்”. இந்த ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மரைடைப்பு ஏற்பட்டு மீண்டவர்கள், இதயம் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை அறவே தவிர்ப்பதோடு, இதயத்தை பலப்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும். ஓட்ஸில் பீட்டா குலுக்கன் என்கிற பொருள் நிறைந்திருக்கிறது இது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்கிறது. இதய தசைகளை வலுப்படுத்துகிறது.

சர்க்கரை சத்து அதிகம் நிறைந்த அரிசி, கிழங்கு வகைகள் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு நீரிழிவு நோயாளிகள் உட்படுத்தபடுகின்றனர். ஓட்ஸில் நிறைந்திருக்கும் பீட்டா குலுக்கன் எனப்படும் அதே வேதிப்பொருள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமசீராக வைக்க உதவுகிறது. நீரிழிவு நோய்களிகளுக்கு சுலபத்தில் ஏற்படும் அசதி மற்றும் சத்து குறைவை தீர்க்கிறது. அடிக்கடி மிகுந்த பசியெடுக்கும் நிலையையும் கட்டுப்படுத்துகிறது.

நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து இருப்பது அவசியம். இந்த நார்ச்சத்து வயிற்றில் உணவை சுலபமாக செரிமானம் செய்ய உதவுவதோடு, குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும். செரிமான உறுப்புகள் நலம் பெறும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin