சித்த மருத்துவத்தில் பெரும்பாலான வைத்திய முறைகள் மூலிகைகளை அதிகம் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. மனிதர்களின் நோய்களை தீர்க்கும் பல அபூர்வ வகையான மூலிகைகள் அடர்ந்த வனப்பகுதிகளில் அதிகம் இருக்கின்றன. ஆனால் நாம் வசிக்கும் கிராம, நகர்ப்புற பகுதிகளில் நாம் வளர்க்கும் செடி வகைகளில் சில மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கின்றன. “மருதாணி” என்றாலே அனைவரும் அறிந்திருப்பது மருதாணி இலைகளை அரைத்து கைகளில் வைத்துக்கொண்டால் சிவந்த சாயம் கைகளில் ஏற்படும் என்பது தான். மருதாணி இலைகளுக்கு இருக்கும் வேறு பல மருத்துவ குணங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் மேற்புற தோல் மிகவும் மென்மையானது. தோலில் தீக்காயம் ஏற்பட்டால் தோலில் பாதிப்புகளை ஏற்படுத்தி அது ஆறும் போது தழும்புகளை உண்டாக்குகிறது. தீக்காயம் பட்ட இடத்தில் குளிர்ச்சி தன்மை மிகுந்த மருதாணி இலையை அரைத்து பூசி வந்தால், காயத்தில் இருக்கும் எரிச்சல் தன்மை மற்றும் வலி குறையும். காயம் சீக்கிரம் ஆறுவதுடன் அழுத்தமான தழும்புகள் ஏற்படுவதை தடுக்கும்.

தலைமுடி என்பது அனைவருக்கும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். தலையில் பொடுகு, அடிக்கடி அதிகளவில் முடி உதிர்வது, இளநரை, ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவது போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீர சுத்தமான தேங்காய் எண்ணையில் தேவையான அளவு மருதாணி இலைகளை போட்டு காய்ச்சி, அந்த எண்ணையை தலைக்கு தடவி வர மேற்கண்ட அனைத்து தலைமுடி சார்ந்த பிரச்சனைகளும் தீரும்.

உடல் உஷ்ண நிலை திடீரென்று அதிகரிப்பதாலும், வயிற்றிற்கு ஒவ்வாத சில வகை உணவுகளை உண்பதாலும், கிருமி நிறைந்த உணவு, நீர் போன்றவற்றை அருந்துவதாலும் சிலருக்கு தீராத வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. மருதாணி இலைகளை அரைத்த பின்பு அந்த இலைகளை பிழிந்து வடிகட்டி எடுக்கப்படும் மருதாணி இலை சாற்றை தீராத வயிற்று போக்கு சீதபேதி பாதிப்பு கொண்டவர்கள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin