தொப்பை, தொந்தி என்று சொல்லப்படும் இந்த வயிற்று கொழுப்பை ஆண்கள் மட்டுமே கொண்டிருந்த காலங்கள் உண்டு. ஆனால் இப்போது நண்டு சிண்டுகள் முதல் வயதானவர்கள், பெண்களை கூட விட்டுவைக்கவில்லை. இன்று இளவயதிலேயே அதிக எடையை கொண்டிருப்பவர்கள் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைத்தாலும் வயிறு தொப்பை மட்டும் குறையவில்லையே என்னும் வருத்தம் இருக்கும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று உடல் எடை சரியாக இருந்தாலும் இந்த தொப்பை மட்டும் முன் நின்று எடையை அதிகப்படுத்தி காட்டுதே என்னும் ஆற்றாமையும் சிலருக்கு உண்டு. இவர்கள் தொப்பை குறைய செய்ய வேண்டிய எளிமையான வழிமுறைகளை சித்த மருத்துவர் சொல்கிறார்கள். படிப்பதோடு பயனும் பெறுங்கள். தொப்பை வயிறு உடல் எடையை அதிகரித்துகாட்டுகிறது என்பதை காட்டிலும் இது ஆரோக்கிய குறைபாட்டையும் உண்டாக்கிவிடுகிறது. இதற்கு காரணம் இவற்றில் ஒன்றாக இருக்கலாம்.

உணவு முறையில் அதிகம் எண்ணெய் சேர்த்த உணவுகளை எடுத்துகொள்வதன் மூலம் அது உடல் தொப்பையை உண்டாக்கிவிட செய்யலாம். இது சிறுக சிறுக படிந்து வயிற்று தொப்பையை உண்டாக்கிவிடும். தொப்பை என்பது பரம்பரையாக வருகிறது என்று பலரும் நினைத்து சமாதானம் ஆகிறார்கள், ஆனால் தொப்பைக்கும் பரம்பரைக்கும் சம்பந்தம் இல்லை. பரம்பரையாக உணவு முறையை ஒரே மாதிரி எடுத்துகொள்வதால் உதாரணத்துக்கு எண்ணெய் பண்டங்கள் அதிகம் சேர்ப்பதால் தொப்பை உருவாகலாம். அதனால் பரம்பரை வழியாக வராது. தூக்க முறைகளில் மாற்றம் செய்யும் போது இரவு நேரங்களில் நீண்ட நேரம் விழித்திருப்பதன் மூலம் தொப்பை போடுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

உணவில் இனிப்பு வகைகளை அதிலும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை சேர்த்த இனிப்புகள், செயற்கை இனிப்பு சேர்த்த பானங்கள் என எல்லாமே தொப்பையை அதிகரிக்க செய்பவை. உணவில் அதிக கார்போஹைட்ரேட், குறைவான புரதம், குறைவான அளவு கொண்ட நார்ச்சத்து உணவுகள் எடுத்துகொள்வதும் கூட தொப்பைக்கு காரணமாகிறது. தொப்பை அதிகமாக இருந்தால் அது ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்க அதிக காரணம் வகிக்கிறது. தொப்பை இருப்பவர்கள் டைப் 2 நீரிழிவு நோய் அபாயம் அதிகரிக்கிறது. இதயம் சம்பந்தமான கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும் அபாயம் கொண்டுள்ளது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin