ஆண், பெண் இருவருக்குமே பெரிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வது தான். மன அழுத்தம், போதிய ஊட்டச்சத்து இன்மை, ஹார்மோன் சமநிலையின்மை இப்படி முடி உதிர்வை அதிகரிக்க பல காரணங்கள் இருந்தும் கூடவே கண்ட ஷாம்புகளையும் போட்டு இன்னும் அதிகமாக்கிக் கொள்கிறோம். இதை எப்படி தடுத்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்ய முடியும். அதற்கு வேறு வழியே இல்லை. நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான வழிமுறைகளை தான் பின்பற்ற வேண்டும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். வெங்காயத்தின் சாறு அதில் நன்கு இறங்கியதும் தலையில் தேய்த்து மசாஜ் செய்து அலசினால் முடி அடர்த்தியாக வளரும்.வெங்காயத்தில் உள்ள சல்பர் முடியின் வேருக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சியைத் தூண்டும். பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் இரண்டுமே பயன்படுத்தலாம். இரண்டிலும் ஒரே ஊட்டச்சத்து தான் இருக்கிறது. ஆனால் சின்ன வெங்காயத்தில் சல்பரின் அளவு அதிகம். அதனால் சின்ன வெங்காயத்தைப் பயன்படுத்துவது இன்னும் கூடுதல் நன்மைகளைப் பெறலாம்.

உருளைக் கிழங்கு வேகவைத்த தண்ணீரை கீழே ஊற்றிவிடாமல் அதை ஆறவைத்து தலைமுடி அலசப் பயன்படுத்துங்கள். அதில் உள்ள புரோட்டீனும் ஸ்டார்ச்சும் தலைமுடி வளர்ச்சியைத் தூண்டி அடர்த்தியாக வளரச் செய்யும். உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் முடிக்கு பளபளப்பையும் பொலிவையும் தரும். முடி வறட்சியையும் தடுக்கும். இது சிறந்த கண்டிஷ்னராகவும் செயல்படும். தலைக்கு வழக்கமாக ஷாம்பு போட்டு குளித்த பின் இந்த உருளைக்கிழங்கு வேகவைத்த நீரில் தலையை அலச வேண்டும். அப்படியேயும் விட்டுவிடலாம் அல்லது அடுத்ததாக வெறும் தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளவும் செய்யலாம்.

முடி வளர்ச்சி அதிகரிக்க தலைமுடியின் வேர்க்கால்களைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதனால் தேங்காய் மற்றும் விளக்கெண்ணெய் சம அளவு எடுத்து சூடாக்கி வெதுவெதுப்பான நிலையில் தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளியுங்கள். மாதம் 2 முறை இதை செய்து வர முடி வளர்ச்சி இருமடங்காக அதிகரிக்கும். வெதுவெதுப்பான எண்ணெயைத் தலையில் தேய்ப்பதால் முடியின் வேர்க்கால்கள் பலம் பெறும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin