நம்முடைய முகத்தை அழகுபடுத்த கூடிய விஷயம் என்றால் அது சிரிப்பு. அந்த சிரிப்பை மேலும் அழகாக வெளிப்படுத்த வேண்டும் என்றால் நம்முடைய பற்கள் வெண்மை நிறமாக, அழகாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் வாயைத் திறந்து சிரிக்க வேண்டும் என்ற எண்ணமே வரும். இல்லாவிட்டால் பல்லின் பழுப்பு நிறமும், கறையும் எங்கே வெளியில் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் சிரிக்காமலே விட்டுவிடுவோம். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? உங்களின் பற்கள் பழுப்பு நிறமாகவும் கறைபடிந்ததாகவும் இருக்கிறதா? உடனே மாற்றிவிடலாம். இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் அதிகமாக காஃபி அல்லது தேநீர் குடிப்பவர்களாக இருந்தால், உங்களது பற்கள் வெண்மை நிறத்தை சீக்கிரமாக இழந்துவிடும். காபியோ, தேநீரோ குடித்த பின்பு வாயை தண்ணீர் ஊற்றி நன்றாக கொப்பளித்து விடவேண்டும். இதே போன்று நிறம் ஒட்டும் காய்கறிகள், பழவகைகளை சாப்பிட்ட பின்பு வாயை முறையாக சுத்தம் செய்துவிட வேண்டும். எடுத்துக்காட்டாக தக்காளி சாஸ், சோயா பீன்ஸ், பீட்ரூட் இந்த பொருட்கள் எல்லாம் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.


இயற்கையான பொருட்களை வைத்து நம்முடைய பற்களின் பழுப்பு நிறத்தை சுலபமாக போக்கிவிடலாம். கல் உப்பை இடித்து தூள் செய்து கொள்ளுங்கள். பற்களில் மட்டும் நறநறவென்று தேய்த்தால், பற்களில் இருக்கும் பழுப்பு நிறம் நாளடைவில் நீங்கிவிடும். ஈறுகளில் தேய்த்து விடக் கூடாது. இரவு நேரத்தில் தூங்க செல்வதற்கு முன்பாக ஆரஞ்சு பழத்தோலை பற்களில் நன்றாகத் தேய்த்து, அப்படியே தூங்கி விட வேண்டும். மறுநாள் காலை எழுந்து பற்களை எப்போதும் போல் சுத்தம் செய்வதன் மூலம் வாயில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் நீங்கி பற்கள் வெண்மை நிறத்தை அடையும். இதேபோல் எலுமிச்சை பழத் தோலையும் பல் தேய்ப்பதற்கு பயன்படுத்தலாம்.

ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில் இந்த இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து பற்களை தேய்த்து வந்தால் பல் அழகாகவும், மென்மையாகவும் மாறும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin