2 ஸ்பூன் கோதுமை மாவு இருந்தா போதும் மறக்காம இதை செய்யுங்க!! செம ருசியா இருக்கும் !!

வணக்கம் நண்பர்களே நம்ம இன்னைக்கு இரண்டு ஸ்பூன் கோதுமை மாவை வச்சு கோதுமை பாயாசம் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. இது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் பெரியவங்க நம்மளும் இதை குடிக்கலாம். நீங்க தினமும் டீ காபி குடிப்பதற்கு பதிலாக வாரத்தில் இரண்டு மூன்று முறை இதை குடித்து வந்தீங்கனா இது நம்ம உடலுக்கு ரொம்ப நல்லதுங்க வாங்க இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் முதல்ல 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு கோதுமை மாவை எடுத்துக்கங்க அதை ஒரு கப் அளவு தண்ணீரில் கலந்து நல்லா மிக்ஸ் பண்ணிக்கங்க.

அப்புறம் ஒரு பாத்திரத்தில் 300ml அளவு தண்ணி எடுத்துக்கங்க அத அடுப்புல வச்சி நல்லா வேக வைத்து விட்டு நாம கலக்கி வைத்திருந்த கோதுமை மாவை எடுத்து அதில் ஊற்றி கலந்து கோங்க கொஞ்சம் வேக விட்டு விட்டு வெல்லம் அல்லது நாட்டு சக்கரை அல்லது நீங்கள் சக்கர கூட தேவையான அளவு கலந்து கொள்ளுங்க அதிகபட்சம் வெல்லம் கலந்து கொண்டால் அதோடைய ருசி இன்னும் நல்லா இருக்கும் அப்புறமா வேக வைத்த கல்லபயிறு ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் கலந்துகோங்க ஒரு சிட்டிகை அல்லது 2 சிட்டிகை ஏலக்காய் பொடி ஆக்கி போடணும்.

இன்னும் நல்ல சுவைக்காக ஒரு ஐந்து ஆறு முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து போடவேண்டும் பின்பு இறுதியாக இரண்டு சில்லு தேங்காய் அரைத்து அல்லது பொடியாகவோ கலக்கவேண்டும் ஒரு இரண்டு நிமிடம் கொதித்த பின்பு நன்றாக கிண்டி விட்டு கோதுமை பாயாசத்தை இறக்கவும் இதை நாம் தினந்தோறும் குடித்து வந்தாலும் உடலுக்கு மிக நல்லது இதை நாம் குழந்தைகளுக்கும் கொடுத்து வந்தால் குழந்தைகளின் வளமாக வளருவார்கள் அன்றாடம் நாம் செலவிடும் நேரத்தில் ஐந்து அல்லது பத்து நிமிடம் செலவிட்டால் போதும் இந்த கோதுமை பாயாசம் தயார் ஆகும் இதை நீங்களும் தெரிந்து கொண்டு உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

தேவைப்படும் பொருட்கள் அரை கப் கோதுமை மாவு ஒரு கப் அளவு தண்ணீர் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை வெள்ளமாக இருந்தால் 2 டீஸ்பூன் போடவேண்டும் நாட்டுச்சக்கரை ஆக இருந்தால் 4 டேபிள்ஸ்பூன் அல்லது உங்களுக்கு தேவையான அளவு போட்டுக் கொள்ளலாம் வேகவைத்த கடலைப் பருப்பு 2 டேபிள் ஸ்பூன் 2 சிட்டிகை ஏலக்காய் பொடி 10 முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து போடவேண்டும் இரண்டு சீல்லு தேங்காய் பொடியாக சீவி எடுத்துக் கொள்ள வேண்டும் இது போன்று குறைந்த பொருட்களை வைத்துக் கொண்டு நாம் சுவையான பல உணவுகளை தயார் செய்து நமது வீட்டில் சாப்பிடலாம் இதை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மிகவும் வலுவானவர்களாக குழந்தை வளர்வார்கள் அதேபோன்று இதை பெரியவர்களும் குடிக்கலாம் அவர்களுக்கும் எலும்பு தசை பிடிப்பு மூட்டு வலி வராமல் இருக்க இதை தொடர்ந்து அருந்தி வந்தால் போதும் நாம் ஆரொக்கியமாக வாழலாம்.