21நாளில் முடி இப்படி அடர்த்தியா வளரும் ! எப்படினு இத பாத்தா தெரியும் ..

நம்முடைய முன்னோர்களின் வலுவான மற்றும் ஆரோக்கியமான கேசம் மற்றும் உச்சந்தலைக்கு என்ன காரணம்? வேறு என்ன. அவர்கள் அடிக்கடி வெந்தயத்தை உச்சந்தலையில் பூசி தலைக்கு குளித்ததுதான். அதன் காரணமாக அவர்களின் கேசம் பளபளப்பாக மாறியதுடன் அவர்கள் பொடுகுத் தொல்லையில் இருந்தும் விடுபட்டார்கள். வெந்தயத்தை தினசரி உபயோகிப்பது கடினமல்ல. இதைப் பயன்ப்டுத்தி நீங்கள் மிக சுலபமாக முடி கொட்டுவது, முடி உதிர்வது, பொடுகு, உச்சந்தலை அரிப்பு போன்ற பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து சுலபமாக விடுபட்லாம். உங்களுக்கு முடி மற்றும் உச்சந்தலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம். அத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்.


முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு வெந்தயத்தை பசை போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறது எழுமிச்சை சாறு கலந்தபின் அவை இரண்டையும் நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது வெந்தய பசையை உச்சந்த தலையில் அழுத்தி தடவ வேண்டும். தலை முழுவதும் தடவிய பிறகு, சிறிது .நேரத்திற்கு நன்கு அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இந்த முறையை மாறி மாறி பின்பற்றி வர உங்களின் முடி உதிரும் பிரச்சனை தீர்ந்து உங்களின் கூந்தல் மிகவும் அழகாக மாறி விடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin