பருக்கள் உண்டாகப் பல காரணங்கள் இருக்கின்றன. சருமத்தின் அடியில் சீபம் என்னும் ஆயில் சுரக்கிறது. அந்த சீபம் வெளிவர முடியாமல் தேங்கி நிற்கும். அந்த சருமத் துளைகளில் பாக்டீரியா போன்ற கிருமிகளால் சருமத்தில் பருக்கள் தோன்றும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல தலையில் பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தாலும் அதன் வெளிப்பாடாக முகத்தில் பருக்கள் தோன்றும். வெளியில் இருந்து தூசுக்கள், மாசுக்கள் சருமத் துளைகளுக்குள் செல்வதனாலும் பருக்கள் உண்டாகும். இவற்றை வீட்டு வைத்திய முறைகள் மூலமாகவே எளிதாக நீக்க முடியும். முகத்தில் பருக்கள் உண்டாக வெறும் எண்ணெய்ப் பசை, சரும அழுக்குகள் மட்டுமே காரணமல்ல. தலையில் பொடுகு இருந்தாலும் முகத்தில் பருக்கள் உண்டாகும்.

தேங்காய் எண்ணெயில் கரிசலாங்கண்ணி இலைச் சாறைச் சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்கி, வெதுவெதுப்பான நிலையில் இருக்கும்போது உச்சந்தலையில் நன்கு தேய்த்து குளித்து வந்தால் தலையில் உள்ள பொடுகும் காணாமல் போகும், அதனால் ஏற்படும் பருக்களும் காணாமல் போகும். சந்தனத்தை ரோஸ்வாட்டரில் கலந்து இரவு தூங்கும்போது பருக்களின் மேல் தடவுங்கள்.

ரோஸ் வாட்டர் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது உடல் சூட்டினால் ஏற்படும் கொப்புளங்களைக் கட்டுப்படுத்தும். ரோஸ்வாட்டரை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, இரவு தூங்கும்முன் முகத்தை நன்கு சுத்தம் செய்துவிட்டு, முகத்தில் ஸ்பிரே செய்து கொண்டு படுக்கலாம். இது சருமத்தைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, பருக்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும். புதினா பருக்களை விரட்டுவதில் மிகச் சிறப்பாகச் செயல்படும் தன்மை கொண்டது. அதேபோல தான் வெள்ளரிக்காயும். இரண்டுமே சருமத்துக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பொருள்கள் தான். வெள்ளரி சாறு ஒரு ஸ்பூன் எடுத்து அதோடு அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் உலரவிட்டு பின் கழுவ பருக்கள் வேகமாக மறையும். முகமும் மாசுக்கள் குறைந்து பளிச்சென்று மாறிவிடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin