இன்று உணவு முறை மாற்றத்தினால் பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை உடல் எடை அதிகரிப்பது ஆகும். மளமளவென உடல் எடை அதிகரித்து விடும் ஆனால் அதைக் குறைப்பதற்கு பல காலம் நாம் போராட வேண்டியிருக்கும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வயிற்றுப் பகுதியில் இருக்கும் சதை தான் உடல் சதையை விட அதிகமாக காணப்படும். இப்படி வயிற்றுப்பகுதியில் இருக்கும் சதை மட்டுமல்லாமல், நம் உடல் எடை மொத்தத்தையும் சரிசமமான அளவில் குறைத்து சிக்கென்ற உடல் வாகை பெற செய்யக்கூடிய இந்த அற்புத பானத்தை வாரம் 2 முறை இரவு ஒரு டம்ளர் குடித்தால் போதுமே! அதை எபப்டி தயாரிப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.


உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் எடையை சீரான முறையில் குறைக்க செய்வதற்கு நாம் அதிகம் மெனக்கெட வேண்டிய அவசியமே இல்லை! இதற்காக தினமும் தீவிரமாக உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமுமில்லை. உணவு கட்டுப்பாட்டில் மற்றும் மூலிகைப் பொருட்களை கொண்டே நாம் இதனை இயற்கையான முறையில் செய்து காட்டி விடலாம். உடலில் இருக்கும் தேவையற்ற சதை பகுதியை குறைய செய்யும் இயற்கை பானம் எப்படி தயாரிக்கலாம்? என்பதை பார்ப்போம்.


முதலில் ஒரு சிறிய உரலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு விரல் அளவிற்கு இஞ்சித் துண்டை நன்கு தோல் நீக்கி கழுவி பொடிப் பொடியாக நறுக்கி போட்டு கொள்ளுங்கள். அதனுடன் 2 பட்டை எடுத்து ஒன்றிரண்டாக உடைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைக்கும் அற்புத மருந்தாக செயல்படும் இந்த பட்டை மற்றும் இஞ்சியில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் இருக்கும் கெட்ட கழிவுகளை நீக்கி, உடல் எடையை கணிசமாக குறைக்கும் ஆற்றல் படைத்தது எனவே இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு மைய இடித்துக் கொள்ளுங்கள். பட்டையை தூளாக சேர்ப்பதை விட, இஞ்சியை சுக்காக சேர்ப்பதை விட இது போல் பிரஷ்ஷாக இருக்கும் இஞ்சி மற்றும் பட்டையை நீங்கள் இடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து பானம் தயாரிக்க வேண்டும். இப்போது அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin