ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய இந்த மூன்றும் தான் பிரதான தேவையாக இருக்கின்றன. இந்த மூன்றும் இருந்து விட்டால் அவனுக்கு அடுத்த கட்ட ஆசையை நோக்கி பயணிக்கக் கூடிய புத்தி பேதலிப்பு வந்து விடுகிறது. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்கிறார் புத்தர். மனிதன் ஆசையை ஒழித்தால் நினைத்ததை அடையலாம் ஆனால் அது அவ்வளவு சுலபமானது அல்ல. உங்கள் 7 சந்ததிகள் வறுமை இன்றி வாழ அரிசியில் என்ன செய்யலாம்? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்! இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அரிசி என்பது அன்னபூரணியை குறிக்கிறது. அன்னபூரணியின் பரிபூரண அருள் இருந்தால் மட்டுமே நாம் வறுமை இன்றி வாழ்வாங்கு வாழ முடியும். அப்படிப்பட்ட அன்னபூரணி தாயாரின் படத்தை எப்பொழுதும் வீட்டில் வைத்திருக்க வேண்டும். உங்களால் முடிந்தால் அன்னபூரணியின் சிலையை சிறிய அளவில் ஆவது பித்தளை, வெள்ளி, செம்பு போன்ற ஏதேனும் ஒரு உலோகங்களில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயம் நல்ல பலன்களை பெறுவீர்கள்.
நம் சமையல் அறையில் வட கிழக்கு என்பது மிகவும் முக்கியமான பகுதியாக இருக்கின்றது. இந்த திசையில் ஒரு மண் ஜாடி அல்லது பீங்கான் ஜாடி ஏதாவது ஒன்றில் அரிசியை நிரம்ப நிரம்ப போட்டுக் கொள்ளுங்கள். அதில் அன்னபூரணியின் சிறிய அளவிலான சிலை அல்லது படம் ஏதேனும் ஒன்றை வெளியில் தெரியாதவாறு வைத்து மூடிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை நீங்கள் பூஜை அறையில் பூஜை செய்த பின் இந்த அன்னபூரணிக்கும் சேர்த்து தீபத்தை காண்பியுங்கள். இப்படி முறையாக செய்து வர அன்னபூரணியின் அருளை நாம் எளிதாக பெற்று விடலாம்.
மேலும் இரவு நேரங்களில் அன்னத்தை வெளியில் கொட்டுவது, குப்பையில் கொட்டுவது, வீணாக்குவது போன்ற செயல்களில் தெரியாமல் கூட ஈடுபடாதீர்கள்! இது அன்ன தோஷத்தை ஏற்படுத்தி உங்களுடைய ஏழேழு சந்ததிகளுக்கும் வறுமையை உண்டாக்கிவிடும். எனவே கூடுமானவரை அன்னத்தை வீணாக்காமல், வறுமையில் வாடும் வறியவர்களுக்கு அன்னதானம் செய்து, அன்னபூரணியை அரிசிக்குள் வைத்து பூஜித்து, நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடைய சந்ததிகளும் வறுமை இன்றி செல்வ செழிப்புடன் வாழ வழி வகை செய்து நற்பயன் பெறலாமே!