சமையலில் சேர்க்கப்படும் ஓர் மசாலாப் பொருள் தான் மல்லி. கொத்தமல்லியைப் போன்றே மல்லி விதைகளும் நல்ல மணத்துடன் இருக்கும். இது உணவின் மணத்தையும், சுவையையும் மேம்படுத்த சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி சமையலில் சேர்க்கும் மல்லி விதைகளில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. பொதுவாக நாம் சமையலில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளுமே பல்வேறு நன்மைகளை தன்னுள் கொண்டிருக்கும். நாம் இதுவரை சீரகம், சோம்பு, மிளகு, கடுகு போன்றவற்றால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பார்த்துள்ளோம்.

ஆனால் மருத்துவ குணம் நிறைந்த மல்லியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன், எனர்ஜி போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளன என்பது தெரியுமா? இத்தகைய மல்லியை ஒருவர் நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது மல்லி விதையை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டிக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

கொத்தமல்லி விதை நீரிழிவு எதிர்ப்பு மருந்தாக பல மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. கொத்தமல்லி விதை இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவும். மேலும் கொத்தமல்லி விதை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும். சர்க்கரை நோய் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் கொத்தமல்லி நீரை தினமும் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதற்கு இரவில் தூங்கும் முன் சிறிது கொத்தமல்லி விதைகடிள நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி அந்நீரைக் குடிக்க வேண்டும்.

வெள்ளைப்படுதல் பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா? கொத்தமல்லி விதைகள் வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். அதற்கு கொத்தமல்லி விதைகளை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி, அந்நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin